அண்மைய செய்திகள்

recent
-

தலதா மாளிகை தொடர்பாக அமைச்சரவைப் பத்திரம் சமர்ப்பிப்பு!

 கண்டி ஸ்ரீ தலதா மாளிகைக்கு வரலாற்றுச் சிறப்புமிக்க எஹெலபொல மாளிகையை ஒப்படைப்பது தொடர்பான அமைச்சரவைப் பத்திரம் அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட்டது.

இது தொடர்பான அமைச்சரவை பத்திரத்தை நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க அண்மையில் அமைச்சரவையில் சமர்ப்பித்துள்ளார்.

கண்டி ராஜவீதியில் அமைந்துள்ள எஹெலேபொல மாளிகை, ஸ்ரீ விக்ரம ராஜசிங்க மன்னரின் ஆட்சிக் காலத்தில் எஹலேபொல மகா அதிகாரம் மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்களின் வசிப்பிடமாக இருந்தது.

கண்டி நகர அபிவிருத்தி திட்டத்தின் கீழ், அஹலேபொல மாளிகை நகர அபிவிருத்தி அதிகார சபைக்கு ஒதுக்கப்பட்டது.
அதன் பின்னர் இங்கு மீள் அபிவிருத்தி பணிகளை ஆரம்பிக்க நகர அபிவிருத்தி அதிகார சபையினால் 2014 ஆம் ஆண்டு இலங்கை கடற்படையிடம் ஒப்படைக்கப்பட்டது.

இதன்படி, தொல்பொருள் திணைக்களத்தின் மேற்பார்வையின் கீழ், நகர அபிவிருத்தி அதிகார சபையின் அறிவுறுத்தல்கள் மற்றும் வழிகாட்டலின் பேரில், நகர அபிவிருத்தி அதிகார சபையின் நிதியில் இருந்து 154.8 மில்லியன் ரூபா செலவிடப்பட்டு, இந்த மாளிகையை புனரமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

இதன் மீள் அபிவிருத்தியை நிறைவு செய்து கண்டி ஸ்ரீ தலதா மாளிகையிடம் கையளிப்பதற்காக இந்த அமைச்சரவை பத்திரம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


தலதா மாளிகை தொடர்பாக அமைச்சரவைப் பத்திரம் சமர்ப்பிப்பு! Reviewed by Author on June 06, 2023 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.