அரசியல் கைக்கூலிகளை நியமித்து உள்ளூராட்சி மன்றங்களை கட்டுப்படுத்த கூடாது – சஜித் பிரேமதாச
சுற்றறிக்கைகள் மூலம் அரசியல் கைக்கூலிகளை நியமித்து உள்ளூராட்சி மன்றங்களை தமக்கு விருப்பியவாறு கட்டுப்படுத்த முயற்சித்து வருவதை எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இன்று நாடாளுமன்றில் சுட்டிக்காட்டினார்.
இந்த சுற்றறிக்கையின் மூலம்,உள்ளூராட்சி மன்றங்களின் பணிகளை ஒருங்கிணைப்பதற்கு ஒருங்கிணைப்பாளர் ஒருவரை நியமிக்க, ஒருங்கிணைப்புக் குழுக்களின் தலைவருக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
இதன் மூலம் புதிய சபைகளை ஏற்படுத்தாமல் அரசியல் அடியாட்கள் மூலம் உள்ளூராட்சி மன்றங்களை கட்டுப்படுத்த தற்போதைய அரசாங்கம் செயற்பட்டு வருவதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் குற்றம் சாட்டினார்.
அத்துடன், நீதி நியாயமான நீதிமன்றத் தீர்ப்புகள் வழங்கப்பட வேண்டிய நிலையில், விருந்துபசார நிகழ்ச்சிகளை நடத்துவது தார்மீகமல்ல என்றும் சுதந்திரமாக தீர்ப்புகளுக்கு இது இடையூறாக அமையும் என்றும் சுட்டிக்காட்டினார்.
உள்ளூராட்சித் தேர்தலை நடத்த முடியாத பட்சத்தில் ஜனாதிபதி தேர்தலை என்றாலும் நடத்துமாறும், இதற்கு தேவையான சட்ட ஏற்பாடுகளை மேற்கொள்ளத் தேவையான ஒத்துழைப்பை வழங்குவதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச மேலும் தெரிவித்தார்.
 
        Reviewed by Author
        on 
        
June 07, 2023
 
        Rating: 


No comments:
Post a Comment