மன்னாரில் மலையக மக்களின் உரிமை நடைபவணிக்கு ஆதரவு நிகழ்வு
வேர்களை மீட்டு உரிமை வென்றிட மாண்புமிகு மலையக மக்களின் நடைபவனி க்கு ஆதரவு வழங்கும் நிகழ்வு ஞாயிற்றுக்கிழமை(30) மதியம் 3 மணியளவில் மன்னார் நகரசபை மண்டபத்தில் இடம்பெற்றது.
தலைமன்னாரில் ஆரம்பமான மாண்புமிகு மலையக மக்களின் 200 வது வருட வருகை பூர்த்தி நிகழ்வைத் தொடர்ந்து தலைமன்னார் பேசாலை ஊடாக நேற்று (30) காலை மன்னாரை குறித்த நடை பவனி வந்தடைந்தது .
இந்த நிலையில் குறித்த மக்களுக்கு தங்களது ஆதரவை தெரிவிக்கும் முகமாக குறித்த நிகழ்வு ஒழுங்கமைக்கப்பட்டு இடம் பெற்றது.
இவ் நிகழ்வில் நான்கு மத தலைவர்கள்,மலையக மக்கள்,சமூக ஆர்வலர்கள் மன்னார் வாழ் மக்கள் உட்பட பலர் கலந்து கொண்டு மலையக மக்களுக்கான தங்களது ஆதரவை வெளிப்படுத்தினர்.
குறித்த நிகழ்வில் மலையக மக்களை சமமான பிரஜைகளாக அங்கி கரிங்கள்,மலையக மக்களின் உணர்வுகளை மதித்து நடத்துங்கள்,மலையக மக்களின் பிள்ளைகளுக்கு உரிய கல்வியை கொடுங்கள்,மலையக அரசியல் தலைவர்களே மலையக மக்கள் தலை நிமிர வழி செய்யுங்கள்,மலையக மக்களுக்கு தனித்தனியாக குடியிருப்புகளை அமைத்து கொடு தோட்டதொழிலாளர்களுக்கு நியாமான அவர்களின் உழைப்பிற்க்குறிய சம்பளத்தை வழங்கு போன்ற பல்வேறு வாசகங்கள் ஏந்தி மலையக மக்களை வரவேற்று தங்களது ஆதரவை வெளி படுத்தியமை குறிப்பிடத்தக்கது.
மன்னாரில் மலையக மக்களின் உரிமை நடைபவணிக்கு ஆதரவு நிகழ்வு
Reviewed by Author
on
July 31, 2023
Rating:

No comments:
Post a Comment