மன்னார் தோட்டவெளியில் தீக்கிரையான வீடு மீள் புணரமைப்பு செய்வதற்கான உதவி வழங்கி வைப்பு
மன்னார் தோட்டவெளி பகுதியில் கடந்த வாரம் குடிசை வீடு ஒன்றில் தீபரவல் ஏற்பட்டதன் காரணமாக முழுவீடும் எரிந்து நாசமாகியிருந்தது
குறித்த குடும்பம் மிகவும் வறுமைபட்ட நிலையில் வாழ்ந்து வந்ததுடன் 7 ஆம் தரம் மற்றும் 9 ஆம் தரத்தில் கற்கும் இரு பிள்ளைகள் உட்பட அக்குடும்பத்தினர் மிகுந்த சிரமத்தின் மத்தியில் எரிந்த வீட்டைகூட சரிபடுத்த முடியாத நிலையில் பலரிடம் உதவி கோரியிருந்தனர்
இந்த நிலையில் குறித்த கோரிக்கையினை ஏற்று மன்னார் தமிழரசு கட்சியின் கிளை தலைவரும் சட்டத்தரணியுமான டினேஸனின் நிதி ஒதுக்கீட்டில் குறித்த குடும்பத்தின் வீட்டின் கூரை அமைப்பதற்கான உதவிகள் வழங்கப்பட்டுள்ளது
மன்னார் தமிழரசு கட்சியின் கிளை உறுப்பினர்கள் இணைந்து மேற்கூரை அமைப்பதற்கான பொருட்களை அக் குடும்பத்தினருக்கு வழங்கி வைத்தனர்
அதே நேரம் குறித்த குடும்பத்தினர் இவ் பொருளாதார நெருக்கடி காரணமாக மிகவும் வறுமையில் வாடுவதால் உதவ முடிந்தவர்கள் குறித்த குடும்பத்திற்கான மேலதிக உதவிகளை வழங்குமாறு கோரிக்கை விடுத்துள்ளனர்
மன்னார் தோட்டவெளியில் தீக்கிரையான வீடு மீள் புணரமைப்பு செய்வதற்கான உதவி வழங்கி வைப்பு
Reviewed by NEWMANNAR
on
July 04, 2023
Rating:

No comments:
Post a Comment