அண்மைய செய்திகள்

recent
-

ஒரு பிரேத பெட்டியில் தாயும் குழந்தையும் அடக்கம்

 அங்குருவாதொட்ட பிரதேசத்தில் படுகொலை செய்யப்பட்ட தாய் மற்றும் குழந்தையின் சடலங்கள் ஊருதுடாவ பிரதேசத்தில் உள்ள அவர்களது இல்லத்திற்கு இன்று (22) பிற்பகல் கொண்டுவரப்பட்டது.

இருவரது உடல்களும் ஒரே சவப்பெட்டி ஒன்றாக வைக்கப்பட்டு சீல் வைக்கப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

படுகொலை செய்யப்பட்ட தாய் மற்றும் குழந்தையின் சடலங்கள் மீதான  பிரேத பரிசோதனைகள் ஹொரணை ஆதார வைத்தியசாலையில் இன்று இடம்பெற்றன.

அங்கு, சட்ட வைத்திய அதிகாரி வெளிப்படையாக தீர்ப்பு வழங்கி, உடல் உறுப்புகளை அரச பகுப்பாய்வாளருக்கு அனுப்பி வைத்தார்.

விலங்குகள் கடித்ததால் சம்பந்தப்பட்ட உடல் உறுப்புகள் சேதமடைந்துள்ளதாக கூறப்படுகிறது.

இதேவேளை, தாய் மற்றும் 11 மாத பெண் குழந்தை உயிரிழந்ததையடுத்து பிரதேசத்தை விட்டு வெளியேறியிருந்த அவரது மைத்துனரை அங்குருதொட்ட பொலிஸார் இன்று காலை பொறுப்பேற்றனர்.

கைது செய்ய செல்லும் போது சந்தேகநபர் பொலிஸ் உத்தியோகத்தர்களை கத்தரிக்கோலால் தாக்க முற்பட்டதாகவும், அதனை தடுக்க முற்பட்ட வேளையில் சந்தேகநபர் கத்திரிக்கோலால் தன்னை தானே குத்தி காயப்படுத்தியதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.


ஒரு பிரேத பெட்டியில் தாயும் குழந்தையும் அடக்கம் Reviewed by Author on July 22, 2023 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.