facebook இனால் இலங்கையில் பெண்களுக்கு பாதிப்பு!
இந்த வருடத்தின் கடந்த 6 மாதங்களில் சமூக வலைதளங்கள் ஊடாக 9,858 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக இலங்கை கணினி பிரிவின்; சிரேஷ்ட தகவல் பாதுகாப்பு பொறியியலாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
புகார் அளித்துள்ளவர்களில் பெரும்பாலானோர் பெண்கள் என்பது தெரியவந்துள்ளது. அவற்றில் 2330 முறைப்பாடுகள் பதிவாகியுள்ளதுடன், இந்த வருடத்தில் பதிவாகியுள்ள அதிக முறைப்பாடுகள் மே மாதத்தில் பதிவாகியுள்ளதாக தகவல் பாதுகாப்பு பொறியியலாளர் மேலும் தெரிவித்துள்ளார்.
ஃபேஸ்புக் கணக்குகளை ஹேக் செய்தல், போலி பேஸ்புக் கணக்குகளை பயன்படுத்துதல், ஒன்லைனில் வேலை தருவதாக கூறி பண மோசடி செய்தல் போன்றவை இந்த புகார்களில் அடங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Reviewed by Author
on
July 12, 2023
Rating:


No comments:
Post a Comment