ஜூலை 9 ம் திகதி மக்கள் புரட்சியால் பதவியிலிருந்து அகற்றப்பட்டார் கோட்டபாய
இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய கடந்த வருடம் ஜூலை 9 ம் திகதி மக்கள் புரட்சியல் பதவியிலிருந்து அகற்றப்பட்டார்.
இந்நிலையிஒல் கோட்டாபய ராஜபக்ச 9 ம் திகதி இரவு கொழும்பு விமானநிலையத்தில் ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் வஜிரஅபயகுணவர்த்தனவுடன் காணப்பட்டதாக விமானநிலைய வட்டாரங்களை செய்தி வெளியாகியுள்ளது.
ஐக்கியதேசிய கட்சியின் தலைவருடன் கோட்டாபய
ஜூலை9 ம் திகதி இரவு கொழும்புவிமானநிலையத்தில் ஐக்கியதேசிய கட்சியின் தலைவருடன் கோட்டாபயவும் அவரது மனைவியும் காணப்பட்டனர்.
இருவரும் விமானநிலையத்திற்குள் நடந்தவாறு உரையாடிக்கொண்டிருந்தனர் என்றும் டெய்லிமிரர் தெரிவித்துள்ளது.
அதேவேளை ராஜபக்சவும் ஐக்கியதேசிய கட்சிதலைவரும் சிங்கப்பூரிலிருந்து ஒரேவிமானத்தில் கொழும்பு வந்துள்ளனர்.
இந்நிலையில் கோட்டாபயவும், வஜிரஅபயகுணவர்த்தனவும் விமானநிலைய கட்டுமானப்பணிகளை அவதானித்தவாறு உரையாடிக்கொண்டிருந்ததை விமானநிலைய அதிகாரிகள் அவதானித்துள்ளனர். லாவோசிற்கு சென்ற கோட்டாபய சிங்கப்பூர் விமானம் மூலம் இலங்கை திரும்பியுள்ளார்.
Reviewed by Author
on
July 11, 2023
Rating:


No comments:
Post a Comment