அண்மைய செய்திகள்

recent
-

குருந்தூர்மலை விவகாரம் : மனித உரிமை ஆணைக்குழுவில் முறைப்பாடு!

 குருந்தூர்மலையில் சைவ வழிபாட்டுரிமை மறுக்கப்பட்டமைக்கு எதிராக பொலிஸாருக்கு எதிராக மனித உரிமை ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

முல்லைத்தீவு, குருந்தூர்மலையில் கடந்த 14 ஆம் திகதி வழிபாட்டுரிமை மறுக்கப்பட்டதுடன், ஊடகவியலாளர் அச்சுறுத்தப்பட்டமை தொடர்பில் மனிதஉரிமை ஆணைக்குழுவில் நேற்று முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

வடமாகாணசபை முன்னாள் உறுப்பினர்களான து.ரவிகரன், ஆலய பரிபாலன சபையினர் மற்றும் சமூக செயற்பாட்டாளர்களான அன்ரனிஜெயநாதன் பீற்றர் இளஞ்செழியன், இரத்தினம் ஜெகதீசன், ஊடகவியலாளர் விஜயரத்தினம் சரவணன், ஆகியோரால் வவுனியா மனித உரிமை ஆணைக்குழுவின் பிராந்தியக் காரியாலயத்தில் முறைப்பாடு செய்யப்பட்டது.

குருந்தூர்மலையில் கடந்த 14ஆம் திகதி வெள்ளிக் கிழமையன்று, பிரதோச தினத்தில் சைவத் தமிழ் மக்கள் சிலர் விசேட பொங்கல் வழிபாடுகளை மேற்கொள்ளச் சென்றபோது பௌத்த துறவிகள் உள்ளிட்ட குழுவினரால் குழப்பம் விளைவிக்கப்பட்டது.

அத்தோடு பொங்கலுக்காக அங்கு தீ மூட்டப்பட்டபோது பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரால் சப்பாத்து கால்களினால் மிதிக்கப்பட்டு அணைக்கப்பட்டது. அத்தோடு வழிபாடுகளை மேற்காள்ள வருகைதந்த தமிழ் மக்களும், மக்கள் பிரதிநிதிகள் சிலரும், சமூகசெயற்பாட்டாளர்களும் பொலிசாரால் தாக்கப்பட்டனர்.

இந்நிலையில் குறித்த இடத்தில் கடமையில் ஈடுபட்டிருந்த பொலிசார் அங்கு சைவழிபாட்டுரிமையினைத் தடுக்கும் வகையில் செயற்பட்ட பௌத்த தேரர்கள் உள்ளிட்ட குழுவினருக்கு ஆதரவாகச் செயற்பட்ட அதேவேளை சைவ வழிபாட்டுரிமைகளைத் தடுக்கின்ற செயற்பாடுகளிலும் ஈடுபட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.


குருந்தூர்மலை விவகாரம் : மனித உரிமை ஆணைக்குழுவில் முறைப்பாடு! Reviewed by Author on July 18, 2023 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.