அண்மைய செய்திகள்

recent
-

குருந்தூர்மலை விவகாரம்..! ஜனாதிபதி அதிரடி அறிவிப்பு!

 

குருந்தூர்மலை ஒரு வழிபாட்டு இடம். அங்கு யாரும் சென்று வழிபடலாம் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
குருந்தூர்மலையில் நேற்று முன்தினம் (14) வழிபடச் சென்ற தமிழ் மக்களுக்கு பிக்குகள், சிங்கள மக்கள் மற்றும் பொலிஸார் இடையூறு விளைவித்தனர்.
இது தொடர்பில் கொழும்பு ஊடகம் ஒன்று எழுப்பிய கேள்விக்கே ஜனாதிபதி மேற்கண்டவாறு பதிலளித்துள்ளார்.
அவர் மேலும் கூறுகையில், “குருந்தூர்மலை விவகாரத்தை வைத்து ஒரு தரப்பினர் அரசியல் இலாபம் தேட முற்படுகின்றனர். இன்னொரு தரப்பினர் மதக் கலவரத்தை ஏற்படுத்த முனைகின்றனர். இவையிரண்டும் தற்போதைய நிலைமையில் தேவையற்றவை.
குருந்தூர்மலை வழிபாட்டிடம். அங்கு எவரும் சென்று வழிபடலாம். இந்த நிலையில் அங்கு ஏற்பட்டுள்ள பிரச்சினைக்கு விரைந்து தீர்வு காண்பது எமது கடமை. சம்பந்தப்பட்ட இரு தரப்பினருடனும் நாம் கலந்துரையாடித் தீர்வு பெற்றுக்கொடுப்போம்” என தெரிவித்துள்ளார்.

குருந்தூர்மலை விவகாரம்..! ஜனாதிபதி அதிரடி அறிவிப்பு! Reviewed by Author on July 16, 2023 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.