அண்மைய செய்திகள்

recent
-

தரமற்ற மருந்துகள் நாட்டில் என்றுமே விநியோகிக்கப்படவில்லை

 தரமற்ற மருந்துகளை நாட்டிற்குக் கொண்டு வருவதற்கு எப்போதுமே நடவடிக்கை எடுக்கவில்லை என சுகாதார அமைச்சின் மேலதிக செயலாளர் விசேட வைத்தியர் சமன் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.


அரசாங்க தகவல் திணைக்களத்தில் இடம்பெற்ற சுகாதார துறையின் தற்போதைய நிலை தொடர்பாக ஊடகங்களுக்கு தெளிவுப்படுத்தும் கலந்துரையாடலின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இதேவேளை, ஏதேனும் பதிவு செய்யப்பட்ட மருந்துகளில் சிக்கல்களை ஏற்படுத்துவதற்கு வாய்ப்புகள் உள்ளதாக குறிப்பிட்ட மேலதிக செயலாளர், சில மருந்துகள் நோயாளிகளுக்கு வழங்கப்படும் போது அவற்றில் சிக்கல்கள் ஏற்படுமாயின், அதற்காக சுகாதார சேவைகள் சபை விரைவாக சிகிச்சை வழங்குவதாகவும் ஆய்வுகளை மேற்கொண்டு அந்த மருந்து பாவனையை தவிர்ப்பதற்கு பொருத்தமான முறையை சுகாதார அமைச்சு மேற்கொள்வதாகவும் தெளிவுப்படுத்தினார்.

தற்போது நாட்டில் பயன்படுத்தப்படும் மருந்துகளில் 80% வரை இந்தியாவிலிருந்து கொண்டுவரப்படுவதாக குறிப்பிட்ட அவர், இந்தியாவில் இருந்து இலங்கைக்கு விநியோகிக்கப்படும் மருந்துகள் இந்திய உயர்ஸ்தானிகராலயத்தின் பூரண அனுமதியுடன் விநியோகிக்கப்படுவதாக குறிப்பிட்டார்.

இவ்வாறு மருந்துகளைக் கொள்வனவு செய்வதானது இன்று நேற்று அல்ல முன்னொரு காலத்திலிருந்தே நடைபெறுவதற்காகவும் மேலதிக செயலாளர் விசேட வைத்தியர் சமன் ரத்நாயக்க மேலும் தெரிவித்தார்


.

தரமற்ற மருந்துகள் நாட்டில் என்றுமே விநியோகிக்கப்படவில்லை Reviewed by Author on July 13, 2023 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.