குற்றச்சாட்டுக்களை ஆராய நிபுணர் குழு
கடந்த சில நாட்களாக அரசு மருத்துவமனைகளில் எழும் குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் ஆராய சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல நிபுணர் குழு ஒன்றை நியமித்துள்ளார்.
மருத்துவ ஆராய்ச்சி நிறுவனத்தின் பணிப்பாளர் டொக்டர் தெதுனு டயஸ் தலைவராகவும், பேராசிரியர் சந்திமா ஜீவந்தர, பேராசிரியர் பிரியதர்ஷினி கலப்பட்டி, டொக்டர் செனித லியனகே, பேராசிரியர் நிதுஷி சமரநாயக்க, பேராசிரியர் எஸ்.எஸ்.பி. வர்ணகுலசூரிய மற்றும் கலாநிதி பிலிப் எச். லீ ஆகியோர் இதன் உறுப்பினர்களாகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
கடந்த சில நாட்களாக அரசு மருத்துவமனைகளில் சந்தேகத்திற்கிடமான மரணங்கள் மற்றும் ஒவ்வாமை தொடர்பில் பல தகவல்கள் பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
குற்றச்சாட்டுக்களை ஆராய நிபுணர் குழு
Reviewed by Author
on
July 17, 2023
Rating:

No comments:
Post a Comment