மேலும் ஒரு தாயும் குழந்தையும் மாயம்
மேலும் ஒரு தாயும் குழந்தையும் காணாமல் போயுள்ளதாக பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
இது தொடர்பில் ஹங்குரான்கெத்த பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
ஹங்குரான்கெத்த ஹோப் தோட்டத்தைச் சேர்ந்த 20 வயதுடைய தாயும் ஒரு வயதும் 8 மாதாங்களுமான பெண் குழந்தையும் இவ்வாறு காணாமல் போயுள்ளனர்.
குறித்த இருவரும் நேற்று முன்தினம் (20) முதல் காணாமல் போயுள்ளதாக அந்த பெண்ணின் தாயார் ஹங்குரான்கெத்த பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார்.
இருவரும் காணாமல் போன தினத்தன்று பேருந்து ஒன்றில் ஹங்குரான்கெத்த, ரிக்கிலகஸ்கட நகரிற்கு சென்றுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.
சம்பவம் தொடர்பில் குறித்த பேருந்தின் சாரதி மற்றும் நடத்துனரிடம் ஹங்குரான்கெத்த பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.
அந்த பெண்ணும் அவரது மகளும் பேருந்தில் பயணித்ததாக அவர்கள் பொலிஸாரிடம் தெரிவித்துள்ளனர்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை ஹங்குரான்கெத்த பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
இதேவேளை, அங்குருவத்தோட்ட, ஊருதுடுவ பிரதேசத்தைச் சேர்ந்த 24 வயதுடைய தாயும், அவரது 11 மாத பெண் குழந்தையும் கடந்த 18 ஆம் திகதி முதல் காணாமல் போயிருந்த நிலையில், நேற்று (21) காலை வீட்டுக்கு அருகிலுள்ள புதரில் சடலமாக மீட்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

No comments:
Post a Comment