போதைப்பொருள் வர்த்தகத்தில் ஈடுபட்டவர்களுக்கான தீர்ப்பு
போதைப்பொருள் வர்த்தகத்தில் ஈடுபட்ட 09 பேருக்கான வழக்குகளின் தீர்ப்புகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்பு பணியகத்தால் கடந்த சில வருடங்களில், முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்புகளில் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களுக்கு இந்த தீர்ப்புக்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
அதன்படி இரண்டு ஈரானியர்கள் மற்றும் ஐந்து பாகிஸ்தானியர்களுக்கும் 10 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
அத்துடன் 2016 ஆம் ஆண்டு பன்னிபிட்டிய பிரதேசத்தில் ஹெரோயின் போதைப்பொருளுடன் சந்தேகநபர் ஒருவர் கைதுசெய்யப்பட்ட நிலையில், குற்றம் நிரூபிக்கப்பட்டதால் அவருக்கு ஆயுள்தண்டனை விதிக்கப்பட்டது.
மேலும், 2016 ஆம் ஆண்டில், நைஜீரிய நாட்டவர் கொக்கேய்ன் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்ட நிலையில், குற்றம் நிரூபிக்கப்பட்டதால் அவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது.
Reviewed by Author
on
July 11, 2023
Rating:


No comments:
Post a Comment