தமிழர்களின் பிரச்சினைகளை வைத்து ஜனாதிபதி சர்வதேச ஆதரவைப் பெற முயற்சி : சாணக்கியன் குற்றச்சாட்டு!
ஒரு பக்கத்தில் தமிழர்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு வழங்குவேன் என கூறி சர்வதேசத்தினுடைய ஆதரவினை பெறவே ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க முயற்சிகளை எடுத்து வருவதாக நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் குற்றம் சுமத்தியுள்ளார்.
அவரது அலுவலகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார். இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,
“தமிழர்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு வழங்குவேன் என கூறி சர்வதேசத்தினுடைய ஆதரவினை பெறவே ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க முயற்சிகளை எடுத்து வருகின்றார்.
அதே போன்று உள்நாட்டுக்கு உள்ளே பிரச்சனைகளை தீர்க்காமல் இருப்பதற்கு தங்களுக்கும் மொட்டு கட்சியினருக்கும் இடையே விரிசல் ஏற்பட்டு விட்டதாக காட்டுவதற்கான முயற்சியினையும் மேற்கொண்டு இருக்கின்றனர்.
Reviewed by Author
on
July 13, 2023
Rating:


No comments:
Post a Comment