கம்பளிப் புழுக்களால் அச்சத்தில் பிரித்தானியர்கள்
பிரித்தானியாவில் வேகமாகப் பரவி வரும் கம்பளிப் புழுக்களால் மக்கள் அச்சமடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
டெர்பிஷையர் என்ற இடத்தில் கருவேல மரங்களில் கூட்டம் கூட்டமாக வாழும் இவ்வகைப் புழுக்களால் மனிதர்களுக்கு உடலில் தடிப்பு, அரிப்பு, வாந்தி, சுவாசப்பிரச்னைகள் ஏற்படும் அபாயம் இருப்பதாகக் கூறப்படுகிறது.
கம்பளிப் புழுக்களில் மேல் உள்ள ரோமங்களில் தாமென்டோபோயின் என்ற நச்சு உள்ளதால் அவை காற்றில் பறந்து மனிதர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்துவதாகச் சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மேலும் இவ்வகைப் புழுக்கள் அதிகம் காணப்படும் மரங்களுக்கு தற்போது சிகிச்சை அளிக்கவும், புழுக்கள் மேலும் பரவாமல் தடுக்கும் வகையில் தீவிர நடவடிக்கை எடுத்து வருவதாகவும் சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
Reviewed by Author
on
July 06, 2023
Rating:


No comments:
Post a Comment