“ லக்சுமி கரங்களினால் “ தையல் இயந்திரம் வழங்கப்பட்டது
தாயகத்தில் பல்வேறுப்பட்ட சமூகசெயல்பாட்டினை செய்து வரும் “ லக்சுமி கரங்கள் “ அதன் ஒர் அங்கமாக மன்னார் பாப்பாமோட்டையில் அமைந்துள்ள அதன் அலுவலகத்தில் தையல் பயிற்சி நிலையத்தினை நடாத்தி வருகின்றது இதில் லக்சுமி கரங்களின் சமூகமட்ட கிராமிய குழுவில் அங்கம்வகிக்கும் பெண்கள் இவ்பயிற்சியினை பயில்கின்றார்கள் முறைப்படி டிப்ளோமா தேர்ர்சி பெற்ற மிகவும் அனுபவம் வாய்ந்த ஆசிரியையினால் ஆறு மாத காலம் பயிற்சி வழங்கப்பட்டு அரச அங்கீகார சான்றிதலும் வெற்றிகரமாக நிறைவு செய்த மாணவிகளுக்கு வழங்கப்படுகின்றது இந்தவகையில் முதல் அணியில் ஆறுமாத பயிற்சியினை முறைப்படி முடித்து தமது வாழ்வாதாரத்தை இதன் மூலம் கொண்டு செல்ல மிகவும் கஸ்டப்பட்ட இரு பயனாளிகள் தேர்வு செய்யப்பட்டு தையல் இந்ந்திரம் வழங்கப்பட்டது தற்போது அடுத்த கட்ட பயிற்சிகளை தேவன்பிட்டி கிராமத்தில் இருந்து 20 பேரும் பாப்பாமோட்டையை சார்ந்த அயல் கிராமத்தில் இருந்து 10 பேரும் மொத்தமாக 30 பேர் இவ்பயிற்சியினை தொடரவுள்ளார்கள் . தாமாகவே முன்வந்து இரண்டு தையல் இயந்திரங்களுக்கான நிதியினை அவுஸ்ரேலியாவில் வசிக்கும் வைத்திய கலாநிதி.S.T.செந்தில்மோகன் ஐயா அவர்களும் திருமதி யோகேஸ் இராஜபோகன் அவர்களும் வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
“ லக்சுமி கரங்களினால் “ தையல் இயந்திரம் வழங்கப்பட்டது
Reviewed by Author
on
August 21, 2023
Rating:

No comments:
Post a Comment