மஹ்மூத் மகளிர் கல்லூரியில் அறிவார்ந்த எதிர்காலத்தை நோக்கி - மாணவர் ஆராய்ச்சியாளர் செயற்றிட்டம் முன்னெடுப்பு.
'ஆராய்ச்சி வாரம் - 2023' தொடர்பான கல்வி அமைச்சு சுற்றுநிருபம் ED/03/56/03/03 (II) இலக்க கடிதத்திற்கு அமைவாக ஆதாரங்களை அடிப்படையாகக் கொண்ட தீர்மானங்களை எடுக்கும் கலாசாரம் ஒன்றை பாடசாலை முறைமைக்குள் உருவாக்குவதன் மூலமாக அறிவார்ந்த எதிர்காலமொன்றுக்கு நாட்டின் பாடசாலை
சிறார்களை முன்னிலைப்படுத்தும் நோக்கில் கல்வி அமைச்சின் ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி கிளையின்
ஊடாக வருடாந்தம் நடைமுறைப்படுத்தப்படும் “பாடசாலை ஆராய்ச்சி வாரம்” செயற்றிட்டத்தின் 2023 ஆம் ஆண்டுக்குரிய செயற்பாடுகள் கல்முனை மஹ்மூத் மகளிர் கல்லூரி (தேசிய பாடசாலை) நடைமுறைப்படுத்தப்பட்டது.
இந்நிகழ்வில் பிரதம அதிதியாக கல்லூரியின் அதிபர் யூ.எல்.எம். அமீன், விஷேட அதிதியாக மஹ்மூத் மகளிர் கல்லூரி பழைய மாணவியும் சாய்ந்தமருது மல்ஹருஸ் ஸம்ஸ் மகா வித்தியாலயத்தின் அதிபர் எம்.சி. நஸ்லீன் றிப்கா அன்சார் ஆகியோர் கலந்து கொண்டனர்.
ஆராய்ச்சி கருத்திட்டம் தொடர்பான நிகழ்த்துகைகளை கனிஷ்ட, சிரேஷ்ட பிரிவு மாணவிகளினால் ஸ்மார்ட் தொலைக்காட்சி (Smart TV) தொழில்நுட்பத்தினை பயன்படுத்தி மேற்கொள்ளப்பட்டதுடன் எதிர்கால கல்வித் திட்டத்தில் புத்தாக்க நடவடிக்கைகளை மையமாக கொண்ட கல்வி முறையை அறிமுகப்படுத்துவதுடன் ஆராய்ச்சியானது முன்னிலை வகிக்கின்றது. ஆராய்ச்சி எனும் தொனிப்பொருளில் சிரேஷ்ட பிரிவு மாணவிகளின் விஷேட நாடகம் ஒன்று அரங்கேற்றப்பட்டதுடன் இந்நாடகம் அனைவருடைய வரவேற்பையும் பெற்றுக்கொண்டது. இந்த நாடக நிகழ்ச்சியை செவ்வனே ஒழுங்கு படுத்திய உதவி அதிபர் என்.டி. நதீகா அவர்களின் நெறிப்படுத்தலில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.
மேலும் நிகழ்வில் பிரதம அதிதியாக பங்குபற்றிய கல்லூரியின் அதிபர் யூ.எல்.எம். அமீன் மற்றும் விஷேட அதிதியாக கலந்து கொண்ட சாய்ந்தமருது மல்ஹருஸ் ஸம்ஸ் மகா வித்தியாலயத்தின் அதிபர் எம்.சி. நஸ்லீன் றிப்கா அன்சார் ஆகியோரினால் ஆராய்ச்சி தொடர்பாக சிறப்புரையாற்றப்பட்டது. மாணவிகளினால் முன்வைக்கப்பட்ட ஆய்வு கட்டுரைகளில் இருந்து சிறந்த முறையில் தொகுக்கப்பட்ட முதல் மூன்று இடங்களை பெற்று கொண்ட மாணவிகளுக்கு அவர்களின் திறமைகளை பாராட்டி சான்றிதழ்கள் வழங்கி வைக்கப்பட்டது.
இந்நிகழ்வில் பிரதி அதிபர் (நிருவாகம்) ஹாஜியானி எஸ்.எஸ்.எம். சமதா மசூது லெவ்வை, உதவி அதிபர்களான ஏ.எச். நதீரா, எம்.எஸ். மனுனா, என்.டி. நதீகா,
பகுதித்தலைவர் மற்றும் தலைவிகளான ஏ.பீ. றோஷன் டிப்றாஸ் (தரம்-06), எம்.ஐ. ரஃபீக்கா பீவி (தரம்-07), எம்.ஜ. சாமிலா (தரம்-08), எஸ்.எம். ஐமான் முபினா (தரம்-09) ஏ.ஆர்.எம். நளீம் (தரம்-10), எம்.ஜ. சஃப்ரினா (தரம்-11), எம்.எம்.எம். இஸ்ஸாத்தீன் (தரம் (12/13) உயர்தர தொழில்நுட்பம்), சிரேஷ்ட கனிஷ்ட பிரிவு ஆசிரியர்கள், அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் மற்றும் மாணவிகள் என பலரும் கலந்து கொண்டனர்.
மஹ்மூத் மகளிர் கல்லூரியில் அறிவார்ந்த எதிர்காலத்தை நோக்கி - மாணவர் ஆராய்ச்சியாளர் செயற்றிட்டம் முன்னெடுப்பு.
Reviewed by Author
on
August 21, 2023
Rating:
Reviewed by Author
on
August 21, 2023
Rating:










No comments:
Post a Comment