அண்மைய செய்திகள்

recent
-

மனித உரிமைகள் பேரவையில் இலங்கை குறித்த தீர்மானம்: ஆதரவும் எதிர்ப்பும்

 ” உயிர்த்த ஞாயிறு குண்டுவெடிப்புகளை நம்பத்தகுந்த முறையில் விசாரிக்கத் தவறியது, அந்த தாக்குதலில் அரசின் பாதுகாப்பு இயந்திரத்தின் உடந்தை பற்றிய அண்மைய வெளிப்பாடுகள் போன்றவை, உள்நாட்டுப் பொறிமுறைகளில் பொதுமக்களிற்கு சிறிதளவே நம்பிக்கை உள்ளது," என அவர் தனது சமர்ப்பிப்பில் கூறினார்.


இலங்கையின் வடக்கு கிழக்கில் உள்ள தமிழ் மக்களின் மனித உரிமைகளைப் பாதுகாப்பதற்காக செயல்படும் பேர்ள் (PEARL) என்ற மனித உரிமை அமைப்பு, இன்று இலங்கை போர்க்குற்றங்கள், மனித குலத்திற்கு எதிரான குற்றங்கள் மற்றும் தமிழ் மக்களுக்கு எதிரான இனப்படுகொலைக்கான நிகழ்ச்சி நிரல் ஆகியவற்றால் அறியப்படுகிறது என்று அதன் பிரதிநிதி தெரிவித்தார். “அண்மையில் கண்டுபிடிக்கப்பட்ட மனித புதைகுழிகள் நீதி மற்றும் பொறுப்புக்கூறல் முன்னெடுக்கப்படாதவரை கடந்தகால நிகழ்வுகள் பாதிக்கப்பட்டவர்களுக்கு மன உளைச்சலை ஏற்படுத்தும்” என்றும் அவர் கூறினார்.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் அறிக்கை, போரினால் பாதிக்கப்பட்ட தமிழர்களின் கருத்துக்களையும் வடக்கு கிழக்கில் உள்ள யதார்த்தத்தையும் பிரதிபலிக்கவில்லை என தமிழர்கள் ஏற்கனவே நிராகரித்துள்ள நிலையில், இலங்கையின் கள நிலவரத்தை இது பிரதிபலிக்கவில்லை என இலங்கை அரசாங்கமும் இதனை உத்தியோகபூர்வமாக நிராகரித்துள்ளது.



மனித உரிமைகள் பேரவையில் இலங்கை குறித்த தீர்மானம்: ஆதரவும் எதிர்ப்பும் Reviewed by Author on September 13, 2023 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.