வீரபுரம் கிராம மக்களுக்கு ஒதுக்கப்பட்ட காணிகள் வழங்குவதற்கு நடவடிக்கை
வீரபுரம் கிராம மக்களுக்கு ஒதுக்கப்பட்ட விவசாய காணிகளை மீண்டும் வழங்குவதற்கு பாராளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதனின் தலையீட்டால் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
வவுனியா செட்டிகுளம் பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட வீரபுரம் கிராம மக்களுக்கு 1994ம் ஆண்டு அரசாங்கத்தினால் ஒதுக்கப்பட்ட விவசாய காணிகள் யுத்த காலத்தில் ஏற்பட்ட இடப்பெயர்வின் காரணமாக மக்கள் பயன்படுத்த முடியாதவாறு காணப்பட்டது.
மீண்டும் மீள்குடியேறிய மக்களுக்கு அக் காணிகளுக்கு செல்வதற்கு தடை ஏற்படுத்தப்பட்டு வந்தது. இதனால் மக்களின் காணிகள் பல ஏக்கர் மாற்று இனத்தவரினால் சுவீகரிக்கப்பட்டு வருகின்றமை தொடர்பாக பாராளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதனின் கவனத்திற்கு கொண்டுவந்ததன் அடிப்படையில் நீண்ட கால முயற்சியின் பலனாக இன்றைய தினம் பாராளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதனின் தலைமையில் வவுனியா மாவட்ட அரசாங்க அதிபர், வெங்கல செட்டிகுளம் பிரதேச செயலாளர், கிராம அலுவலர் மற்றும் பொது அமைப்பின் பிரதிநிதிகள் என பலரும் குறிப்பிட்ட இடத்திற்கு நேரடியாக கள விஜயம் செய்து நிலைமைகளை அவதானித்துடன் பொது அமைப்புக்களின் கருத்துக்களையும் கேட்டறிந்தனர்.
இதன் பிரகாரம் இப் பகுதி மக்களின் வாழ்வாதாரங்களை மேம்படுத்துவதற்காக பல ஆண்டுகளுக்கு முன்பு வீரபுரம் மக்களுக்கு என ஒதுக்கப்பட்ட காணிகளை வழங்குவதற்கு விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என அரச அதிபரினால் தெரிவிக்கப்பட்டது.
வீரபுரம் கிராம மக்களுக்கு ஒதுக்கப்பட்ட காணிகள் வழங்குவதற்கு நடவடிக்கை
Reviewed by Author
on
October 25, 2023
Rating:

No comments:
Post a Comment