உயிர்த்தராசன் குளம் பாடசாலையில் இடம்பெற்ற சரஸ்வதி பூஜை
கலாச்சாரம் என்பது மனித வாழ்க்கை கோலத்தின் பண்புகள் ஆகும் .நம் கடந்த காலத்தில் இருந்த ஆரோக்கியமான கலாச்சாரங்களை அறிவாக, அனுபவமாக மாணவர்களுக்கு வழங்குவதை நிறுத்தும் போது தான் சமூகம் தவறான வாழ்க்கை முறைக்கு செல்கிறது.
இந்து மதமும், தமிழர் வாழ்க்கை முறையும் பல சிறப்பான கலாச்சாரங்களை கொண்டுள்ளது இதனை கத்தோலிக்க பாடசாலையான எமது உயிர்த்தராசன் குளம் பாடசாலை சமூகம் நன்கு தெரிந்து கலாச்சாரங்கள் தொடர்பான அறிவு, திறன், மனப்பாங்கு களை பல்வேறு செயல்பாடுகள்.நிகழ்வுகள் ஊடாக மாணவர்களிடத்தையே ஏற்படுத்துகிறது அதன்படி 9 நாட்களாக நடைபெற்ற சரஸ்வதி பூஜை நிகழ்வுகளின் இறுதி விழாவாக "வாணிவிழா" இன்று பாடசாலையில் பாடசாலை அதிபர் . ரிச்மன் சோசை அவர்களின் சிறப்பான தலைமையின் கீழ் வழிகாட்டல்களோடும் சிறப்பாக இடம்பெற்றது.
மாணவர் தொகை குறைவாக இருந்தபோதும் சகல மத மாணவர்கள், பெற்றோர்கள் ,ஆசிரியர்கள்,எல்லோரும் ஒரே மக்களாக இணைந்து செயல்பட்டு காலை பூஜை நிகழ்வும் படையல் நிகழ்வும், பிரசாதம் பரிமாறல் நிகழ்வும் தொடர்ந்து பல்வேறு பாரம்பரிய கலை நிகழ்வுகள் சகல மாணவர்களின் பங்கு பெற்றுதலோடு சிறப்பாக இடம் பெற்றது.
இதில்கூத்து,நாடகம்,நடனம் , வில்லுப்பாட்டு,பாடல் போண்ற நிகழ்வுகள் இடம்பெற்றன. ஆசிரியர்கள் அனைவரும் கலாச்சார உடையான புடவை,வேட்டி அணிந்து வந்தனர்.
இன்றைய தினம் சரஸ்வதி பூஜை நிகழ்வு நாள் பல்வேறு கலாச்சார விடயங்கள் மாணவர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் கற்றலாக அமைந்தது
(தகவல் :பாடசாலை சமூகம்
உங்கள் பாடசாலை நிகழ்வுகள், தகவல்களை நியூமன்னார் ஊடகத்தில் பதிவுசெய்ய செய்ய , நீங்கள் அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி Newmannar@gmail.com

No comments:
Post a Comment