50 அடி பள்ளத்தில் குடைசாய்ந்த பாரவூர்த்தி
நுவரேலியா, போலீஸ்ம் பிரிவிற்குட்பட்ட பதுளை - நுவரேலியா பிரதான வீதியில் ஹஹ்கல பகுதியில் பாரவூர்த்தி ஒன்று வீதியை விட்டு விலகி 50 அடி பள்ளத்திற்க் குடைசாய்ந்து விபத்துக்குளானதில், பாரவூர்தியின் சாரதி காயமடைந்த நிலையில் நுவரேலியா மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக நுவரேலியா பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த சம்பவம் இன்று (06) வெள்ளிக்கிழமை இடம்பெற்றதாக பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.
பதுளை - நுவரேலியா பிரதான வீதியின் வளைவு பகுதி ஒன்றில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதோடு, விபத்துக்குள்ளான பாரவூர்த்தி பலத்த சேதமடைந்துள்ளதாக பொலிஸாரின் ஆரம்ப கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
நுவரேலியாவில் இருந்து பதுளை நோக்கி பயணித்த பாரவூர்தியே இவ்வாறு விபத்துக்குள்ளாக்கியதோடு, குறித்த பகுதியில் பல விபத்துக்கள் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை நுவரேலியா போலீசார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
50 அடி பள்ளத்தில் குடைசாய்ந்த பாரவூர்த்தி
Reviewed by Author
on
October 06, 2023
Rating:

No comments:
Post a Comment