மன்னாரில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் ஆரம்பமான தேசிய மீலாதுன் நபி விழா- ஊடகவியலாளர்களுக்கு அனுமதி மறுப்பு.
மன்னாரில் இன்று ஞாயிற்றுக்கிழமை (22) காலை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் ஆரம்பமான தேசிய மீலாதுன் நபி விழாவில் கலந்து கொள்ள பிராந்திய ஊடகவியலாளர்களுக்கும்,மாவட்ட செயலக ஊடக அலுவலருக்கும் அனுமதி வழங்கப் படாமல் திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர்.
இவ் வருடத்திற்கான தேசிய மீலாதுன் நபி விழா இம்முறை மன்னார் மாவட்டத்தில் முன்னெடுக்க ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்ட நிலையில் முசலி தேசிய பாடசாலையில் ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டது.
-வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் காதர் மஸ்தான் தலைமையில் முழு ஏற்பாடுகளும் முன்னெடுக்கப்பட்டது.
இவ்விடையம் தொடர்பாக மன்னார் மற்றும் முசலியில் காதர் மஸ்தான் தலைமையில் பல்வேறு கலந்துரையாடல்களும் முன்னெடுக்கப்பட்டது.
எனினும் பாராளுமன்ற உறுப்பினர் காதர் மஸ்தான் தேசிய மீலாதுன் நபி விழா ஏற்பாடுகள் குறித்து மன்னார் மாவட்டத்தில் வைத்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்காமல் கொழும்பில் வைத்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில் இன்று ஞாயிற்றுக்கிழமை (22) காலை 9.30 மணியளவில் பாராளுமன்ற உறுப்பினர் காதர் மஸ்தானின் ஏற்பாட்டில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் ஆரம்பமான தேசிய மீலாதுன் நபி விழாவில் கலந்து கொள்ள சென்ற பிராந்திய ஊடகவியலாளர்களுக்கும் ,மாவட்ட செயலக ஊடக அலுவலருக்கும் அனுமதி வழங்கப்படாமல் திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர்.
-ஒரு மதத்தை பிரதிபலிக்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்ட குறித்த நிகழ்வில் பிராந்திய ஊடகவியலாளர்கள் அனுமதிக்கப் படாமை குறித்தும் குறிப்பாக குறித்த நிகழ்வின் ஏற்பாட்டாளரான பாராளுமன்ற உறுப்பினர் காதர் மஸ்தானின் செயல்பாடுகள் குறித்தும் ஊடகவியலாளர்கள் விசனம் தெரிவித்துள்ள தோடு,பாராளுமன்ற உறுப்பினர் காதர் மஸ்தானின் கட்சி சார்ந்தவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்பட்டு அரசியல் நிகழ்வு போல் குறித்த தேசிய மீலாதுன் நபி விழா ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் இடம் பெறுவதாக விசனம் தெரிவித்துள்ளனர்.
எனினும் பாராளுமன்ற உறுப்பினர் காதர் மஸ்தான் தேசிய மீலாதுன் நபி விழா ஏற்பாடுகள் குறித்து மன்னார் மாவட்டத்தில் வைத்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்காமல் கொழும்பில் வைத்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில் இன்று ஞாயிற்றுக்கிழமை (22) காலை 9.30 மணியளவில் பாராளுமன்ற உறுப்பினர் காதர் மஸ்தானின் ஏற்பாட்டில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் ஆரம்பமான தேசிய மீலாதுன் நபி விழாவில் கலந்து கொள்ள சென்ற பிராந்திய ஊடகவியலாளர்களுக்கும் ,மாவட்ட செயலக ஊடக அலுவலருக்கும் அனுமதி வழங்கப்படாமல் திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர்.
-ஒரு மதத்தை பிரதிபலிக்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்ட குறித்த நிகழ்வில் பிராந்திய ஊடகவியலாளர்கள் அனுமதிக்கப் படாமை குறித்தும் குறிப்பாக குறித்த நிகழ்வின் ஏற்பாட்டாளரான பாராளுமன்ற உறுப்பினர் காதர் மஸ்தானின் செயல்பாடுகள் குறித்தும் ஊடகவியலாளர்கள் விசனம் தெரிவித்துள்ள தோடு,பாராளுமன்ற உறுப்பினர் காதர் மஸ்தானின் கட்சி சார்ந்தவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்பட்டு அரசியல் நிகழ்வு போல் குறித்த தேசிய மீலாதுன் நபி விழா ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் இடம் பெறுவதாக விசனம் தெரிவித்துள்ளனர்.
மன்னாரில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் ஆரம்பமான தேசிய மீலாதுன் நபி விழா- ஊடகவியலாளர்களுக்கு அனுமதி மறுப்பு.
Reviewed by Author
on
October 22, 2023
Rating:

No comments:
Post a Comment