முல்லைத்தீவு மாவட்டத்தில் உளவியல் ரீதியான மேம்பாட்டிற்காக தொடர்ந்து உழைப்பேன் வடமாகாண சபைத் தேர்தலில் வெற்றிபெற்ற வைத்தியர் சி.சிவமோகன்.
வடக்கு மாகாண சபைத் தேர்தலில் எமது கட்சியையும் என்னையும் அமோக வெற்றியடையச்
செய்த எமது மக்களுக்கு நன்றியையும் பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்கின்றேன் .
போரால் பாதிப்படைந்த முல்லைத்தீவு மாவட்ட மக்களின் சுகாதார ரீதியில் உளவியல் மேம்பாட்டிற்காக நான் தொடர்ந்தும் உழைப்பேன் என வடக்கு மாகாண சபைத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் முல்லைத்தீவு மாவட்டத்தில் போட்டியிட்டு 9 ஆயிரத்து 296 வாக்குகளைப் பெற்று வெற்யீட்டிய வைத்திய கலாநிதி சி . சிவமோகன் தெரிவித்தார் .
முல்லைத்தீவு மாவட்டத்தில் போருக்குப் பின்னர் உளவியல் மேம்பாட்டை அடைய வேண்டிய தேவை காணப்படுகிறது .
யுத்தத்தால் அழிவடைந்துள்ள எமது மாவட்டங்களின் உளவியல் மேம்பாட்டை அடைவதற்காக நாம் பல்வேறு விசேட திட்டங்களை மேற்கொள்ள வேண்டியுள்ளது .
இதற்காக உள்நாட்டு அரச மற்றும் அரசசார்பற்ற உதவிகளையும் சர்வதேச உதவிகளையும் பெற்று விசேட வேலைத்திட்டங்களையும் மேற்கொள்ள முயற்சிக்கவுள்ளேன் . நான் பல வருடங்களாக மாவட்ட வைத்திய அதிகாரியாகக் கடமையாற்றியுள்ளேன் . எமது மக்களும் எமது சேவையை மறக்காது என்னை மாகாண சபை உறுப்பினராகத் தெரிவு செய்துள்ளனர் .
எமக்கு பெருமளவான மக்கள் ஆதரவினை வழங்கியுள்ளனர் . இதற்காக எமது மக்களுக்கு நன்றி யையும் பாராட்டுக்களையும் தெரி வித்துக் கொள்கின்றேன் என்றார் .
முல்லைத்தீவு மாவட்டத்தில் உளவியல் ரீதியான மேம்பாட்டிற்காக தொடர்ந்து உழைப்பேன் வடமாகாண சபைத் தேர்தலில் வெற்றிபெற்ற வைத்தியர் சி.சிவமோகன்.
Reviewed by Admin
on
September 29, 2013
Rating:

No comments:
Post a Comment