அண்மைய செய்திகள்

recent
-

கொலை செய்யப்பட்ட பெண்ணின் தலையா கிடைத்தது?

 வெள்ள நிலைமையைக் கண்காணிப்பதற்காகச் சென்ற சபுகஸ்கந்த குற்றப் பிரிவு பொறுப்பதிகாரி, இறந்த நபரின் மண்டை ஓடு ஒன்றை கண்டறிந்துள்ளார்.


இன்று (15) காலை 10.30 மணியளவில் சபுகஸ்கந்த பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சியாம்பலாபே, கலஹிடியாவ பாலத்தை அண்மித்த பகுதிக்கு சென்ற போதே அவர் இந்த மண்டை ஓட்டை அவதானித்துள்ளார்.

அதன்படி அங்கொடையில் கொல்லப்பட்ட பெண்ணின் தலை இதுவா என கண்டறிய விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

மஹர நீதவான் சம்பவ இடத்தில் விசாரணை நடத்தியதன் பின்னர், மண்டை ஓடு குறித்த பெண்ணின் தலையா என்பதை கண்டறிய மரபணு பரிசோதனைக்கு அனுப்பப்படும் என்று பொலிஸ் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.

பெண்ணை கொலை செய்த சந்தேகநபர்கள் வாக்குமூலம் அளித்ததையடுத்து, அந்த பகுதியில் தேடுதல் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்ட போதிலும், கடும் மழை காரணமாக பெண்ணின் தலை கிடைக்கவில்லை என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை சபுகஸ்கந்த பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.


கொலை செய்யப்பட்ட பெண்ணின் தலையா கிடைத்தது? Reviewed by Author on October 15, 2023 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.