கண்டியில் நடை பெற்ற சிறுவர் தின நிகழ்வு
மத்திய மாகாண கண்டி மாவட்ட பன்வில பிரதேச அப்பலபெத்த பகுதியில் பாரதி அறக்கட்டளையினால் இடம்பெற்ற சிறுவர் மற்றும் ஆசிரிய தின நிகழ்வு இன்று (08) வெகு விமர்சையாக நடைபெற்ற இந்நிகழ்வில் சிறுவர்களின் கலை நிகழ்வுகள் இடம்பெற்றதோடு அவர்களுக்கான பரிசுப் பொதிகளும் வழங்கி வைக்கப்பட்டது. அத்தோடுமேலும் பாரதி அறக்கட்டளையின் தலைவர் சந்தோஷ் அவர்கள் தலைமையேற்று பங்கு பற்றிய இந்நிகழ்வில் ஊர் மக்களின் முழு ஒத்துழைப்புடன் இந்நிகழ்வு சிறுவர் மற்றும் ஆசிரிய தின விழா சிறப்பாக நடந்தேறியது. ஆசிரியர்களுக்கான சிறு கலைச்செயற்பாடுகளும் அவர்களுக்கான சான்றிதழ்களும் பரிசு கேடயமும் வழங்கி வைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
கண்டியில் நடை பெற்ற சிறுவர் தின நிகழ்வு
Reviewed by Author
on
October 08, 2023
Rating:

No comments:
Post a Comment