அண்மைய செய்திகள்

recent
-

வவுனியாவில் அரச பேரூந்து மீது மதுபான போத்தலால் தாக்குதல் - சிதறிய கண்ணாடிகள்

 


வவுனியா ஹோரவப்போத்தானை வீதியில் பள்ளிவாசலை அண்மித்த பகுதியில் நேற்று (21.10.2023) மாலை 6.00 மணியளவில் காரில் வந்த இனந்தெரியாத நபர்கள் மதுபான போத்தலை அரச பேரூந்து கண்ணாடி மீது வீசி விட்டு தப்பித்து சென்றுள்ளனர்.

பராக்கிரமபுர பகுதியிலிருந்து வவுனியா நோக்கி பயணித்துக்கொண்டிருந்த வவுனியா சாலைக்கு சொந்தமான இலங்கை போக்குவரத்து சபை பேரூந்து ஹோவரப்போத்தானை வீதி பள்ளிவாசலை அண்மித்த சமயத்தில் காரில் வந்த இனந்தெரியாத நபர்கள் குறித்த அரச பேருந்தின் கண்ணாடி மீது மதுபான போத்தலை வீதிவிட்டு தப்பித்துச்சென்றுள்ளனர்.

இத் தாக்குதல் சம்பவத்தினால் பேரூந்தின் கண்ணாடி சேதமடைந்திருந்தமையுடன் அப்பகுதியூடான போக்குவரத்தும் 30நிமிடங்களாக ஸ்தம்பிதம் அடைந்திருந்தமையுடன் சம்பவ இடத்திற்கு விரைந்த வவுனியா பொலிஸார் சம்பவம் தொடர்பிலான முழுமையான விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.









வவுனியாவில் அரச பேரூந்து மீது மதுபான போத்தலால் தாக்குதல் - சிதறிய கண்ணாடிகள் Reviewed by Author on October 22, 2023 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.