அண்மைய செய்திகள்

recent
-

மன்னார் மாவட்டச் செயலகத்தில் இடம்பெற்ற நவராத்திரி விழா..

 மன்னார் மாவட்டச் செயலகத்தின் ஊழியர் நலன் புரிச் சங்கம் ஏற்பாடு செய்த நவராத்திரி விழா இன்று (24) செவ்வாய்க்கிழமை காலை மன்னார் மாவட்டச் செயலகத்தின் பிரார்த்தனை மண்டபத்தில் இடம்பெற்றது.


மன்னார் மாவட்டச் செயலக மேலதிக மாவட்ட செயலாளர் ய.பரந்தாமன் தலைமையில் குறித்த நிகழ்வு இடம்பெற்றது.

இதன் போது பெரிய கடை ஞான வைரவர் ஆலய பிரதம குரு சிவ சிறி சிறீகரன் குருக்கள் தலைமையில் சரஸ்வதி பூஜை இடம்பெற்றது.

 அதனைத்தொடர்ந்து மாவட்டச் செயலக சிரேஷ்ட கலாசார உத்தியோகத்தர் இ.நித்தியானந்தன் தலைமையில் நிகழ்வுகள் இடம் பெற்றது.

மேலும் மாவட்டச் செயலகத்தில் கடமையாற்றும் பணியாளர்களின்   கல்வியைத் தொடங்கப் போகும் பிள்ளைகளுக்கு 'ஏடு தொடங்கி வைக்கப்பட்டதோடு மாவட்டச் செயலகத்தில் கடமையாற்றும் தொழில்நுட்ப உத்தியோகத்தரும் ,சிறந்த பாடகருமான ஜெகதீஸ்வரன் சுரேந்தர் என்பவரின் இசை துறையை பாராட்டி கௌரவிக்கும்    வகையில் அவருக்கு 'இன்னிசைச் செம்மல்' எனும் சிறப்பு விருது வழங்கி கௌரவிக்கப்பட்ட அமையும் சிறப்பு அம்சமாகும்.








மன்னார் மாவட்டச் செயலகத்தில் இடம்பெற்ற நவராத்திரி விழா.. Reviewed by Author on October 24, 2023 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.