அண்மைய செய்திகள்

recent
-

வவுனியாவில் குடிசன வீட்டு வசதிகள் தொகை மதிப்பீடு ஆரம்பம்

 வவுனியாவில் குடிசன வீட்டு வசதிகள் தொகை மதிப்பீடு


வவுனியாவில் குடிசன வீட்டு வசதிகள் தொகை மதிப்பீட்டு நடவடிக்கைகள் இன்று (17.10) ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

வவுனியா பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட வைரவபுளியங்குளம் கிராம அலுவலர் பிரிவில் இச்செயற்பாடானது ஆரம்பித்து வைக்கப்பட்டது.

இலங்கையின் 15வது குடிசன வீட்டு வசதிகள் தொகை மதிப்பீட்டின் இரண்டாம் கட்டமான கட்டடங்களை நிரல்படுத்தும் செயற்திட்டமனாது நாடளாவிய ரீதியில் ஆரம்பிக்கப்பட்டு வருகின்றது.

இச்செயற்பாடுகளிற்காக மாவட்ட செயலாளரின் வழிகாட்டலில் நிரல்படுத்தும் உத்தியோகத்தர்களாக  கிராம சேவையாளர்கள் மற்றும் ஏனைய வெளிக்கள உத்தியோகத்தர்கள் நியமிக்கப்பட்டு, ஒவ்வொரு கட்டடங்கள் மற்றும் வீடுகளிற்கு சென்று அக்கட்டிடங்கள் அங்கு வசிக்கும் நபர்கள் தொடர்பான தகவல்களை சேகரிக்கப்பட்டு வருகின்றது.

அதற்கமைவாக, வவுனியா பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட வைரவபுளியங்குளம் கிராம அலுவலர் பிரிவில் இச்செயற்பாடானது  முன்னெடுக்கப்பட்டது. 









வவுனியாவில் குடிசன வீட்டு வசதிகள் தொகை மதிப்பீடு ஆரம்பம் Reviewed by Author on October 17, 2023 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.