கல்முனை மாநகர சபை பட்ஜெட்டுக்கு கல்முனையன்ஸ் போரம் முன்மொழிவுகள் சமர்ப்பிப்பு.!
கல்முனை மாநகர சபையின் 2024ஆம் ஆண்டுக்கான வரவு- செலவுத் திட்டத்திற்கு கல்முனையன்ஸ் போரம் முன்மொழிவுகளை சமர்ப்பித்துள்ளது.
அமைப்பின் தலைமை செயற்பாட்டாளர் முபாரிஸ் எம். ஹனிபா தலைமையிலான குழுவினர் புதன்கிழமை (25) மாநகர சபை ஆணையாளர் ஏ.எல்.எம்.அஸ்மி அவர்களிடம் இதனைக் கையளித்துள்ளனர்.
இந்நிகழ்வில் மாநகர பொறியியலாளர் ஏ.ஜே.எச். ஜௌஸியும் பங்கேற்றிருந்தார்.
இதன்போது குறித்த முன்மொழிவுகளை மாநகர சபையின் பட்ஜெட்டில் உள்வாங்கி, நடைமுறைப்படுத்த வேண்டியதன் அவசியம் பற்றி ஆணையாளரிடம் வலியுறுத்தப்பட்டது.
கல்முனை மாநகர சபையின் அடுத்த ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்திற்கு பொது மக்கள் மற்றும் பொது அமைப்புகளிடம் முன்மொழிவுகளை கோரியமைக்காக கல்முனையன்ஸ் போரம் செயற்பாட்டாளர்களினால் இதன்போது ஆணையாளருக்கு நன்றியும் பாராட்டும் தெரிவிக்கப்பட்டது.
அத்துடன் கிழக்கு மாகாண உள்ளூராட்சி மன்றங்களிடையே செயற்றிறன் மதிப்பீட்டில் கல்முனை மாநகர சபை முதலாம் படிநிலைக்கு தெரிவு செய்யப்பட்டுள்ளமை மகிழ்ச்சியளிப்பதாகவும் அதற்காக ஆணையாளர் மற்றும் உத்தியோகத்தர்களுக்கு கல்முனை மக்கள் சார்பில் வாழ்த்துக்களையும் பாராட்டையும் தெரிவித்துக் கொள்வதாக அவர்கள் மேலும் குறிப்பிட்டனர்.
கல்முனை மாநகர சபை பட்ஜெட்டுக்கு கல்முனையன்ஸ் போரம் முன்மொழிவுகள் சமர்ப்பிப்பு.!
Reviewed by Author
on
October 26, 2023
Rating:

No comments:
Post a Comment