அண்மைய செய்திகள்

recent
-

புதுக்குடியிருப்பில் பல்வேறு குற்ற செயல்களுடன் தொடர்புடைய போதைக்கு அடிமையான இளைஞன் ஒருவர் கைது.

 முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு பிரதேசத்துக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்ட இளைஞனை புதுக்குடியிருப்பு போலீசார் கைது 28-11-2023 செய்துள்ளார்கள்.


29அகவையுடைய கைவேலி பகுதியினைச் சேர்ந்த குறித்த இளைஞன் போதைக்கு அடிமையானவர் என விசாரணைகளில் தெரிய வந்துள்ளதுடன் இவரல் களவாடப்பட்ட 16 காஸ்சிலிண்டர்கள் ஒரு தண்ணீர் மோட்டார் ஒரு மிதிவண்டி வயர் ரோல்கள் கதிரைகள் தங்கசங்கிலி உள்ளிட்ட பெருமளவான பொருட்களை பொலிசார் மீட்டுள்ளார்கள்.

குறித்த இளைஞன் போதைக்கு அடிமையான இளைஞன் என பொலிசாரின் விசாரணைகளில் தெரிய வந்துள்ளதுடன் புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் தனிமையில் வசிக்கும் வயோதிபர்களின் வீடுகளுக்கு செல்லும் குறித்த இளைஞன் அங்கு காணப்படும் காஸ் சிலிண்டர்களை களவாடுவதுடன் தங்க நகைகளை கொள்ளையடித்து சென்ற சம்பவங்களும் இடம்பெற்றுள்ளது
இவற்றை விற்று போதைப் பொருட்களுக்கு பயன்படுத்தி வருவதாக விசாரணைகள் தெரிய வந்துள்ளது.

இதேவேளை புது குடியிருப்பு பிரதேசத்தில் பல வீடுகளில் காஸ் சிலிண்டர் களவாடப்பட்டுள்ள தொடர்பாக புதுக்குடிப்பு பொலிசாருக்கு கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டுக்கு அமைய புதுக்குடியிருப்பு பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி எம் கே கேரத் தலைமையிலான குழுவினர்கள் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு குறித்த இளைஞனை கைது செய்துள்ளதுடன் களவாடப்பட்ட பொருட்களில் ஒரு தொகுதியினையும் மீட்டுள்ளார்கள்

இந்தக் கொள்ளை சம்பவத்துடன் தொடர்புடைய மேலும் மூவரை கைது செய்துள்ளதுடன் முச்சக்கர வண்டி ஒன்றும் மீட்கப்பட்டுள்ளது

சந்தேக நபர்களையும் சான்று பொருட்களையும் முல்லைத்தீவு மாவட்ட நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தும்  நடவடிக்கையில் புதுக் குடியிருப்பு பொலிசார் ஈடுபட்டுள்ளார்கள்







புதுக்குடியிருப்பில் பல்வேறு குற்ற செயல்களுடன் தொடர்புடைய போதைக்கு அடிமையான இளைஞன் ஒருவர் கைது. Reviewed by Author on November 29, 2023 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.