வவுனியாவில் உடைப்பெடுத்த குளம் - 15ஏக்கர் வயல் நிலங்கள் பாதீப்பு
வவுனியா ஆசிகுளம் கிராம சேவையாளர் பிரிவுக்குட்பட்ட கோமரசங்குளம் பகுதியிலுள்ள குளமொன்று உடைப்பெடுத்தமையினால் அதன் கீழுள்ள 15ஏக்கர் வயல் நிலங்கள் நீரில் முழ்கி பாதிப்படைந்துள்ளமையுடன் குளத்தின் நீர் தொடர்ந்தும் வெளியேறிய வண்ணமுள்ளது
மாவட்டத்தின் கடந்த சில நாட்களாக தொடரும் மழையுடனான காலநிலையினால் பல குளங்களின் நீர்மட்டம் உயர்வடைந்து காணப்பட்ட நிலையிலேயே இவ் குளம் இன்று (12.11) காலை உடைப்பெடுத்துள்ளது. ஊர் மக்கள் பல மணிநேரமாக குளத்தின் உடைபெடுத்த பகுதியினை மண்நிரப்பி கட்டுப்படுத்த முயற்சிகளை மேற்கொண்ட போதிலும் அவை பயனளிக்கவில்லை
கோமரசங்குளம் பகுதியிலுள்ள இவ் குளம் நீண்ட காலமாக எவ்வித புனரமைப்பு பணிகளும் மேற்கொள்ளப்படவில்லை என்பதுடன் குளத்தின் கீழ் 35ஏக்கர் வயல் நிலங்கள் காணப்படுகின்ற போதிலும் தற்போது 15ஏக்கர் வயல் நிலங்கள் நீரில் மூழ்கியுள்ளது
இவ் அனர்த்தம் தொடர்பில் உரிய தரப்பினர்களுக்கு தகவல் வழங்கியமையுடன் இவ் குளத்திலிருந்து
வெளியேறும் நீரினை கட்டுப்படுத்த விரைந்து நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது
வவுனியாவில் உடைப்பெடுத்த குளம் - 15ஏக்கர் வயல் நிலங்கள் பாதீப்பு
Reviewed by Author
on
November 12, 2023
Rating:

No comments:
Post a Comment