யுத்தத்தில் உயிர் நீத்தவர்களை நினைவு கூர்ந்து மன்னார் பேசாலை புனித வெற்றி நாயகி ஆலயத்தில் இடம் பெற்ற விசேட திருப்பலி.
யுத்தத்தில் உயிர் நீத்தவர்களை நினைவு கூறும் முகமாக மன்னார் பேசாலை மக்களின் ஏற்பாட்டில் பேசாலை புனித வெற்றி நாயகி ஆலயத்தில் இன்று திங்கட்கிழமை (27) காலை விசேட திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டது.
-அருட்தந்தை எஸ்.அன்ரன் அடிகளார் தலைமையில் குறித்த இரங்கல் திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டது.
இதன் போது யுத்தத்தில் உயிர் நீத்தவர்களை நினைவு கூர்ந்து தீபம் ஏற்றி அஞ்சலி செலுத்தப்பட்டது.
அதனைத் தொடர்ந்து திருப்பலி ஒப்புக் கொடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது
யுத்தத்தில் உயிர் நீத்தவர்களை நினைவு கூர்ந்து மன்னார் பேசாலை புனித வெற்றி நாயகி ஆலயத்தில் இடம் பெற்ற விசேட திருப்பலி.
Reviewed by Author
on
November 27, 2023
Rating:

No comments:
Post a Comment