லண்டன் தமிழர் வரலாற்று மையத்தில் மாவீரர் நாளுக்கான ஏற்பாடுகள் தீவிரம்
தமிழ் மக்களின் வாழ்வியலுடன் பிரிக்க முடியாத வகையில் அவர்களின் ஆன்மாவில் ஆழப்பதிந்துவிட்ட தேசிய நினைவெழுச்சி மாவீரர்நாள் நிகழ்வுகள் தாயகம் மற்றும் ஐரோப்பிய நாடுகளில் ஆரம்பமாகவுள்ளன.
மாவீரர்நாள் நிகழ்வுகளை குழப்பும் வகையில் பல்வேறு வகையிலான இன்னல்களையெல்லாம் வழமைபோலவே புறந்தள்ளி மக்கள் தமது தேசிய கடமையை நிறைவேற்றும் வகையில் ஒன்று கூடிவருகின்றனர்.
அந்தவகையில் பிரித்தானியாவில் இருக்கின்ற தமிழர் வரலாற்று மையத்தில் மாவீரர் நாளுக்கான ஏற்பாடுகள் இடம்பெற்றுக் கொண்டிருக்கின்றன.
அங்கு ஏராளமான தமிழ் உறவுகள் கலந்து கொண்டு நினைவேந்தலுக்கான ஏற்பாடுகளை செய்து வருகின்றனர்.
அத்துடன் லண்டன் EXCEL மண்டபத்திலும் தமிழீழத் தேசிய மாவீரர் நாளிற்கான ஏற்பாடுகள் பிரம்மாண்டமாக செய்யப்பட்டு வருகின்றன.
தமிழர் தாயக பகுதிகளில் தமிழ் மக்களின் ஆன்மாவில் ஆழப்பதிந்துவிட்ட தேசிய நினைவெழுச்சி மாவீரர் நாள் நிகழ்வுகள் சற்றுநேரத்தில் ஆரம்பமாகவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:
Post a Comment