முல்லைத்தீவு பொலிசாரின் கெடுபிடிகள்! வீட்டில் வைத்திருந்த சிவப்பு மஞ்சள் கொடிகளை எடுத்துச் சென்ற பொலிசார்
முல்லைத்தீவு மாவட்டத்தில் பல துயிலும் இல்லங்களில் மாவீரர் நாள் எழுச்சி செயற்பாடுகளை குழப்பும் நடவடிக்கையில் பொலிசார் ஈடுபட்டு வருவதாக ஏற்பாட்டாளர்கள் குற்றச்சாட்டியுள்ளார்கள்
பலரது பெயர் விவரங்களை தாங்கி நீதிமன்ற கட்டளையை பெற்று அவர்களின் கையில் கொடுத்து நீதிமன்ற கட்டளையில் குறிப்பிட்ட விடயங்களுக்கு மேலாக சிவப்பு மஞ்சள் கொடிகள் கூட கட்ட கூடாது பெயர் பொறிக்க கூடாது கார்த்திகைப் பூ பாவிக்க கூடாது என்றும் அவ்வாறான செயற்பாடுகளில் ஈடுபட்டால் அவர்களை கைது செய்வோம் என்று மிரட்டும் தொனியிலும் தெரிவித்து வருகின்றார்கள்
இதேவேளை முள்ளிவாய்க்கால் பகுதியில் சமூக செயற்பாட்டாளர் ஒருவருடைய வீட்டில் பையில் போட்டு வைத்திருந்த சிகப்பு மஞ்சள் கொடிகளை பொலிசார் நேற்று எடுத்துச் சென்றுள்ளார்கள்
மாத்தளன் அம்பலவன் பொக்கணை பகுதி, முள்ளிவாய்க்கால் மேற்கு இரட்டை வாய்க்கால் பகுதி, முள்ளிவாய்க்கால் கிழக்கு பகுதி, முல்லைத்தீவு அளம்பில் போன்ற பகுதிகளுக்கு செல்லும் பொலிசார் அங்கு ஏற்பாட்டாளர்களை அச்சுறுத்தும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றார்கள்
முல்லைத்தீவு பொலிசாரின் கெடுபிடிகள்! வீட்டில் வைத்திருந்த சிவப்பு மஞ்சள் கொடிகளை எடுத்துச் சென்ற பொலிசார்
Reviewed by Author
on
November 26, 2023
Rating:
Reviewed by Author
on
November 26, 2023
Rating:

.jpg)







No comments:
Post a Comment