தமிழ் மக்களின் மெய்யான தலைவர்கள் என வவுனியாவில் பதாதைகள்!
தமிழ் மக்களின் ''மெய்யான தலைவர்கள்'' என அரசுடன் இணைந்து செயற்ப்பட்ட சிலரது புகைப்படங்கள் தாங்கிய கதைகள் வவுனியாவில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.
வவுனியா தலைமை பொலிஸ்நிலையத்திற்கு மிக அருகாமையில் தபால் நிலையத்திற்கு முன்பாக குறித்த பதாதைகள் இன்று (26.11) காலை காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.
அவற்றில் முன்னைய அரசாங்கத்தில் அமைச்சர்களாக இருந்த லக்ஸ்மன் கதிர்காமர், மகேஸ்வரன், ஈபிடிபி அமைப்பின் முக்கியஸ்தர்களாக செயற்ப்பட்டவர்கள், அமிர்தலிங்கம், தினமுரசு பத்திரிகையின் முன்னாள் ஆசிரியர், ராஜினி் திரணகம, இந்தியப் பிரதமர் ராஜீவ்காந்தி, பத்மநாபா உட்பட பலரது பதாதைகள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளதுடன், அவர்கள் புலிகளால் படுகொலை செய்யப்பட்டதாக வாசகங்கள் பொறிக்கப்பட்டுள்ளது.
குறித்த பதாதைகளில் இருக்கும் சிலர் தொடர்பாக தமிழ் மக்களிற்கு தெரியாத நிலையில் அவர்களையும் தலைவர்களாக சித்தரித்து குறித்து பதாதைகள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
தமிழ் மக்களின் மெய்யான தலைவர்கள் என வவுனியாவில் பதாதைகள்!
Reviewed by Author
on
November 26, 2023
Rating:

No comments:
Post a Comment