மன்னாரில் அமைதியான முறையில் தீபத் திருநாள் கொண்டாட்டம்.
இந்து மக்கள் இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை (12) தீபாவளி பெருநாளை கொண்டாடி வரும் நிலையில் மன்னார் மாவட்ட இந்து மக்களும் மிகவும் அமைதியான முறையில் தீபாவளி பெருநாளை கொண்டாடி வருகின்றனர்.
மன்னார் மாவட்டத்தில் உள்ள இந்து ஆலயங்களில் இன்று (12) காலை விசேட பூஜை வழிபாடுகள் இடம்பெற்றன.
நாட்டில் நிலவி வரும் பொருளாதார நெருக்கடி காரணமாகவும் பொருட்களின் விலை ஏற்றம் மற்றும் சீரற்ற காலநிலை காரணமாக மன்னார் மாவட்ட மக்களின் இயல்பு நிலை பாதிக்கப்பட்டுள்ளது.
ஆலயங்களில் விசேட வழிபாடுகள் இடம்பெற்றதுடன் சீரற்ற காலநிலை காரணமாக மக்களின் நடமாட்டம் மட்டுப்படுத்தப்பட்டுள்ளது.
எனினும் மக்கள் ஆலயங்களுக்குச் சென்று பூஜை வழிபாடுகளில் ஈடுட்டு வருவதுடன் மன்னார் மாவட்ட மக்கள் தீபத் திருநாளை அமைதியான முறையில் கொண்டாடுகின்றமை குறிப்பிடத்தக்கது.
எனினும் மக்கள் ஆலயங்களுக்குச் சென்று பூஜை வழிபாடுகளில் ஈடுட்டு வருவதுடன் மன்னார் மாவட்ட மக்கள் தீபத் திருநாளை அமைதியான முறையில் கொண்டாடுகின்றமை குறிப்பிடத்தக்கது.
மன்னாரில் அமைதியான முறையில் தீபத் திருநாள் கொண்டாட்டம்.
Reviewed by Author
on
November 12, 2023
Rating:

No comments:
Post a Comment