அண்மைய செய்திகள்

recent
-

தேசிய தீபாவளியை முன்னிட்டு வவுனியாவில் தபால் முத்திரை வெளியீடு

 தேசிய தீபாவளி தினத்தை முன்னிட்டு வவுனியாவில் தபால் முத்திரை வெளியிட்டு வைக்கப்பட்டது.


வவுனியா, கந்தசாமி ஆலய பிரதான மண்டபத்தில் இன்று (12.11) மாலை இடம்பெற்ற தேசிய தீபாவளி நிகழ்வில் வைத்து குறித்த தபால் முத்திரை வெளியிட்டு வைக்கப்பட்டது.

இந்துக்களின் தீபாவளி தினத்தை முன்னிட்டு இத் தபால் முத்திரை இலங்கை தபால் திணைக்கள அத்தியட்சகர் றுவான் சரத்குமார அவர்கள் வெளியிட்டு வைக்க முதல் முத்திரையை இந்து காலாசார அமைச்சர் விதுர விக்கிரமநாயக்க அவர்கள் பெற்றுக் கொண்டார்.

அதனைத் தொடர்ந்து அதிதிகளாக கலந்து கொண்ட கிராமிய அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் காதர் மஸ்தான், வவுனியா மாவட்ட அபிவிருத்திக் குழுத் தலைவரும், வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமாக கு.திலீபன், வடமாகாண பிரதம செயலாளர் சமன்பந்துலசேன, மாவட்ட அரச அதிபர் பீ.ஏ.சரத்சந்திர ஆகியோருக்கு தபால் முத்திரை வழங்கி வைக்கபட்டதுடன், மதகுருமாருக்கும் வங்கப்பட்டது.

குறித்த நிகழ்வில் இலங்கை தபால் திணைக்கள அத்தியட்சகரருடன் வடமாகாண தபால் திணைக்கள அத்தியட்சகர் மதுமதி வசந்தகுமாரி மற்றும் திணைக்களத்தின் உயர் அதிகாரிகளும் கலந்து கொண்டனர். 







தேசிய தீபாவளியை முன்னிட்டு வவுனியாவில் தபால் முத்திரை வெளியீடு Reviewed by Author on November 12, 2023 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.