அண்மைய செய்திகள்

recent
-

நானாட்டான் பிரதேசத்தில் உள்ள கால்நடைகளுக்கு ஒதுக்கப்பட்ட மேய்ச்சல் நிலம் போதாது- மாற்று வழியை அமைக்க வேண்டிய தேவை உள்ளது - நானாட்டான் பிரதேச செயலாளர் மா.ஸ்ரீஸ்கந்த குமார் தெரிவிப்பு

 மேய்ச்சல் தரைகளுக்கு மேலதிகமாக மேய்ச்சல்  தரவை களை  தேடுவதற்கு  நடவடிக்கை எடுக்க வேண்டும்.  இந்த மேய்ச்சல் தரவை க்கு  பொறுப்பான திணைக்களம் விலங்கு உற்பத்தி சுகாதாரத் திணைக்களம் ஆகும்.   கால்நடைகள் தொடர்பான விடயங்களுக்கு குறித்த திணைக்களம்  பொறுப்பு கூற வேண்டும்.


அந்த வகையில் விலங்கு உற்பத்தி சுகாதாரத் திணைக்கத்தினரோடு  சேர்ந்து அனைவரும்  இதற்கான மாற்று வழிகளை அமைக்க வேண்டும்.

  கடந்த சிறுபோகத்தில்  கட்டுக்கரை குளத்தின் கீழ் இருக்கும் 33,000 ஏக்கர் காணியில் பத்து ஏக்கருக்கு  ஒன்று என்ற விகிதத்தில் 3000 ஏக்கரில் சிறு போகத்தை மேற் கொண்டிருந்தோம். இந்த சிறுபோகம் யாவும்  கட்டுக்கரை குளத்தின் கீழ்  குளத்துக்கு நீர் வருகின்ற நீரேந்து பகுதியிலேயே அதாவது புலவு என்ற சொல்லப்படுகின்ற பகுதியில் வழங்கப்பட்டிருந்தது.

காலப் போக்கத்திலே புலவு செய்கை மேற் கொள்ளப்படாத படியினால்  பொருத்தமான  நீர் பிடிப்பற்ற  புலவுகளை அடையாளம் கண்டு அந்தப் பகுதிகளில் கால்நடைகளுக்கான மேய்ச்சல் தரவைகளாக அடையாளப் படுத்துவதோடு அதற்கும் மேல் அதிகமாக கால்நடை வளர்ப்பவர்களும்  விவசாயிகளும் ஒருவராக இருப்பதனால் இந்த கால்நடைகளுக்கான தீவனங்களை ஒதுக்கப்பட்ட விவசாய காணிகளில்  வளர்த்தெடுப்பதன் ஊடாகவும்  அதே நேரத்தில் விவசாய அறுவடையின் பின்னர் கிடைக்கும் வைக்கோல்களை பாதுகாத்து சேமித்து வைப்பதன் ஊடாகவும்   ஏனைய மாற்று   வழிகளில் கால்நடைகளுக்கான தீவனத்தை உற்பத்தி செய்வதன் ஊடாகவும்  கால்நடைகளுக்கான தீவனங்களை பெற்றுக்  கொள்ள முடியும்.

நானாட்டான் பகுதியில் கால்நடைகளுக்கான மேய்ச்சல் தரைகளை  150 தொடக்கம் 200 ஏக்கர் வரை அடையாளம் கண்டால் கூட இதற்கான மாற்று நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு  ஏற்கனவே மாவட்டத்தில் அடையாளம் காணப்பட்டு உள்ள மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள பெருவெளிப் பகுதியை   பொருத்தமான நடவடிக்கைகள்  ஊடாக கால் நடைகளுக்கான மேய்ச்சல் நிலமாக பெற்றுக் கொள்ள வேண்டிய தேவையும் காணப்படுகிறது.

 இதில் பல்வேறு தரப்பினர் உடைய இணக்கப்பாட்டில் சரியான முறையில் இவை மேற்கொள்ளப்பட வேண்டும்.  நானாட்டான் பிரதேசத்தில் உள்ள  25000ற்கு மேற்பட்ட கால் நடைகளுக்கும் 2500க்கும் மேற்பட்ட எருமை மாடுகளுக்கும் மேய்ச்சல் நிலங்களை  நானாட்டான்  பிரதேசத்தில் முழுமையாக பெற்றுக் கொள்வது என்பது தற்போது அரச காணிகள் இல்லாத நிலையில் சாத்தியம் இல்லை என நானாட்டான் பிரதேச செயலாளர் மாணிக்கவாசகர் ஸ்ரீஸ்கந்த குமார் மேலும் தெரிவித்தார்.


நானாட்டான் பிரதேசத்தில் உள்ள கால்நடைகளுக்கு ஒதுக்கப்பட்ட மேய்ச்சல் நிலம் போதாது- மாற்று வழியை அமைக்க வேண்டிய தேவை உள்ளது - நானாட்டான் பிரதேச செயலாளர் மா.ஸ்ரீஸ்கந்த குமார் தெரிவிப்பு Reviewed by Author on November 08, 2023 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.