அண்மைய செய்திகள்

recent
-

வள்ளிபுனம் பகுதியில் சிறப்பாக இடம்பெற்ற மாவீரர் பெற்றோர் கௌரவிப்பு

தமிழ் மக்களுக்கான உரிமை போருக்காக தங்களது பிள்ளைகளை உவந்தளித்த மாவீரர்களது பெற்றோர்களை கௌரவிக்கும்  நிகழ்வு தமிழர் தாயகமெங்கும் மிகவும் உணர்வுபூர்வமாக இடம்பெற்று வருகின்றது


அந்த வகையில் முல்லைத்தீவு மாவட்டத்திலும் பல்வேறு இடங்களிலும் மாவீரர் பெற்றோர்  கௌரவிப்பு நிகழ்வுகள் இடம் பெற்று வருகின்றன அந்தவகையில் வள்ளிபுனம்  தேவிபுரம் பகுதிகளை சேர்ந்த மாவீரர் பெற்றோர் கௌரவிப்பு விசேடமாக ஒழுங்கமைக்கப்பட்ட இடத்தில் நேற்று (25) சிறப்பாக இடம்பெற்றது

சமூக செயற்பாட்டாளர் தம்பையா  யோகேஸ்வரன் தலைமையில் இடம்பெற்ற குறித்த நிகழ்வில் மாவீரர்களுடைய பெற்றோர்கள்  வள்ளிபுனம் முருகன் ஆலயம் முன்பாக இருந்து மலர் மாலை அணிவித்து மங்கள வாத்தியம் மற்றும்   பான்ட் வாத்திய அணிவகுப்போடு விழா மண்டபம் வரை அழைத்துவரப்பட்டு அங்கு பொதுச்சுடரினை நான்கு மாவீரர்களின் தாயார் ஒருவர் ஏற்றியதை தொடர்ந்து அங்கு சுடர்கள் ஏற்றப்பட்டு திருவுருவப்படத்திற்கு மலர் மாலை அணிவிக்கப்பட்டு மலர் வணக்கம் இடம்பெற்று அகவணக்கம் செலுத்தப்பட்டு பெற்றோர் கௌரவிப்பு நிகழ்வு மிகச் சிறப்பாக இடம் பெற்றது

மாணவர்களின் கலை நிகழ்வுகளோடு இடம்பெற்ற குறித்த பெற்றோர் மதிப்பளிப்பு நிகழ்வில் வள்ளிபுனம் தேவிபுரம் பகுதியை சேர்ந்த நூற்றுக்கும் மேற்ப்பட்ட பெற்றோர்கள் கௌரவிக்கப்பட்டிருந்தனர் பெற்றோர்களுக்கு மாவீரர்களின் நிணைவாக தென்னங்கன்றுகளும் வழங்கி வைக்கப்பட்டிருந்தன



























வள்ளிபுனம் பகுதியில் சிறப்பாக இடம்பெற்ற மாவீரர் பெற்றோர் கௌரவிப்பு Reviewed by Author on November 26, 2023 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.