மல்லாவி பகுதியில் சிறப்பாக இடம்பெற்ற மாவீரர் பெற்றோர் கௌரவிப்பு நிகழ்வு
மல்லாவி பகுதியில் பிரத்தியேகமாக அமைக்கப்பட்ட இடத்தில் மாவீரர் பெற்றோரை கௌரவிக்கும் நிகழ்வு ஒன்று இன்று சனிக்கிழமை (25) இடம்பெற்றது .
நிகழ்வில் அனிஞ்சியன்குளம் பாடசாலைக்கு முன்பாக இருந்து மாவீரர்களின் பெற்றோர்கள் அழைத்துவரப்பட்டதனை தொடர்ந்து பொதுச் சுடரினை மூன்று மாவீரரின் தாயார் ஏற்றிவைத்தார்.
நினைவு படத்திற்கான மலர் மாலையை மூன்று மாவீரரின் தாயார் அணிவித்ததை தொடர்ந்து மலர் அஞ்சலி செலுத்தப்பட்டு அகவணக்கம் இடம்பெற்றது
இதனை தொடர்ந்து மாவீரர்களின் பெற்றோருக்கான கௌரவிப்பு இடம்பெற்றது. இந்த நிகழ்வில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் மற்றும் சட்டத்தரணி காண்டீபன் ஆகியோரும் கலந்து கொண்டிருந்தனர்.
நிகழ்வில் மல்லாவி மற்றும் பாண்டியன்குளம் ,துணுக்காய் பகுதிகளை சேர்ந்த மாவீரர்களின் பெற்றோர்கள் கலந்துகொண்டிருந்தனர்
மல்லாவி பகுதியில் சிறப்பாக இடம்பெற்ற மாவீரர் பெற்றோர் கௌரவிப்பு நிகழ்வு
Reviewed by Author
on
November 25, 2023
Rating:

No comments:
Post a Comment