அண்மைய செய்திகள்

recent
-

மன்னாரில் இடம்பெற்ற சுனாமி பேரலையில் உயிரிழந்தவர்களின் 19 ஆம் ஆண்டு நினைவேந்தல்.

 மன்னாரில் இடம்பெற்ற சுனாமி பேரலையில்   உயிரிழந்தவர்களின் 19 ஆம் ஆண்டு நினைவேந்தல்.


சுனாமி பேரலையில்  உயிரிழந்தவர்களின்  19 ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு  இன்று (26) செவ்வாய்க்கிழமை மன்னார் பிரதான பாலத்தடி யில் முன்னாள் மன்னார் பிரதேச சபை உறுப்பினர் லுஸ்ரின் மோகன்ராஜ் தலைமையில் இடம்பெற்றது.

உயிரிழந்தவர்களை நினைவு கூறும் வகையில் இன்று காலை 9.25 குறித்த கடற்கரை பகுதியில் தீபம் ஏற்றி மலர் தூவி உயிர் நீத்தவர்களுக்காக உணர்வுபூர்வமாக அஞ்சலி செலுத்தப்பட்டது.

மெசிடோ நிறுவன பணிப்பாளர் ஜாட்சன் பிகிறாடோ சமூக செயற்பாட்டாளர் பெனடிற், மன்னார் நகரசபையின் முன்னாள் உப தலைவர் ஜான்சன், மன்னார் நகரசபை முன்னாள் உறுப்பினர் இரட்ணசிங்கம் குமரேஸ் ஆகியோர் நினைவு சுடரை ஏற்றி நினைவஞ்சலியை ஆரம்பித்து வைத்த நிலையில் அதனைத் தொடர்ந்து கலந்து கொண்ட மீனவர்கள்,வர்த்தகர்கள்,பிரதேச சபை உறுப்பினர்கள்,மெசிடோ நிறுவன ஊழியர்கள் இணைந்து சுடர் ஏற்றி,மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.































மன்னாரில் இடம்பெற்ற சுனாமி பேரலையில் உயிரிழந்தவர்களின் 19 ஆம் ஆண்டு நினைவேந்தல். Reviewed by வன்னி on December 26, 2023 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.