மன்னார் சித்திவிநாயகர் இந்துக்கல்லூரியில் சிறப்பாக நடைபெற்ற ஆறுமுகநாவலரின் 201 ஆவது பிறந்தநாள் நிகழ்வு
ஆறுமுகநாவலரின் 201 ஆவது பிறந்த தினமான இன்று 18/12/2023 திங்கட்கிழமை இலங்கையின் பல இடங்களில் இடம்பெற்றது ,
அவருடைய பிறந்த தினத்தினை நினைவுகூர்ந்து கொண்டிருக்கின்ற சந்தர்ப்பத்தில் மன்னார் மாவட்டத்திலும் சித்திவிநாயகர் இந்துக்கல்லூரியில் பாடசாலையின் அதிபர் தலைமையில் நடைபெற்றது .
மாணவர்கள் மத்தியில் ஆறுமுகநாவலரின் வாழ்வியல் தொடர்பான பேச்சு , கதாபிரசங்கம், கவிதை போன்ற நிகழ்வுகளும் ,இன்றைய தலைமுறைக்கு அவருடைய வாழ்கையினையும் அவர் தமிழுக்கும் சமயத்திற்கும் ஆற்றி சேவையினையும் மாணவர்கள் அறிந்து கொள்ளவேண்டும் என்பதற்காக நிகழ்வுகள் ஒழுங்கமைப்பட்டிருந்தது
இன்றைய காலை ஒன்றுகூடலில் பாடசாலையின் புதிய பிரதிஅதிபராக நியமனம் பெற்ற திரு. லோகேஸ்வரன் சுரேன் அவர்களை பாடசாலையின் அதிபர் , பிரதி அதிபருக்கு மாலை அணிவித்து வரவேற்ருந்தமையும் குறிப்பிடத்தது
நிகழ்வில் ஆறுமுகநாவலருக்கு மாலை அணிவித்து கலாசாரத்தினையும் விழுமியத்தினையும் பறைசாற்றி இன் நிகழ்வு சிறப்பாக நிறைவு பெற்றது .

No comments:
Post a Comment