அண்மைய செய்திகள்

recent
-

சாய்ந்தமருது கமு/கமு/மல்ஹருஸ் ஸம்ஸ் மகாவித்தியாலத்திற்கு புதிய அதிபர்

 சாய்ந்தமருது கமு/கமு/மல்ஹருஸ் ஸம்ஸ் மகா வித்தியாலய அதிபராக அதிபர் சேவை ஒன்றை சேர்ந்த எம்.எஸ். நபார் நியமனம்.

சாய்ந்தமருது கமு/கமு/மழ்ஹருஸ் ஸம்ஸ் மகா வித்தியாலய அதிபராக அதிபர் சேவை ஒன்றை சேர்ந்த எம்.எஸ். நபார் அவர்கள் இன்று செயலாளரின் கடிதத்தின் பிரகாரம் பெறுப்பேற்றார்.
அவருக்கு வழங்கிய நியமன கடிதத்தில் குறித்த பாடசாலைக்கான அதிபர் ஒருவரை நியமிக்கும் பொருட்டு கிழக்கு மாகாண கல்வி அமைச்சினால் 17.10.2023 ஆம் திகதி நேர்முகப் பரீட்சை நடாத்தப்பட்டது இதில் கலந்து கொண்ட இரண்டு அதிபர்களில் ஏ. முஜீன் என்பவர் தேசிய பாடசாலையில் கடமையாற்றிய நிலையில் கிழக்கு மாகாணத்திற்கு நிரந்தரமாக விடுவிப்பு பெற்றமை தொடர்பில் எமக்கு எதுவித ஆவணங்களும் அந்த அதிபரினால் இதுவரை சமர்ப்பிக்கப்படவில்லை. எனவே, இவ் விடயம் தொடர்பாக கிழக்கு மாகாண கௌரவ ஆளுநர் அவர்களினால் மாகாண கல்வி அமைச்சுக்கு கோரப்பட்டதனை தொடர்ந்து அனைத்து ஆவணங்களும் கௌரவ ஆளுநர் அவர்களுக்கு சமர்ப்பிக்கப்பட்டதன் அடிப்படையில், கௌரவ ஆளுநர் அவர்களால் எமக்கு வழங்கப்பட்ட அறிவுறுத்தலுக்கமைவாக குறித்த பாடசாலைக்கு அதிபராக அதிபர் சேவை ஒன்றை சேர்ந்த எம். எஸ். நபார் அவர்கள் நியமனம் செய்யப்படுவதாகவும், மேலும் கடமையினை பொறுப்பேற்றமை தொடர்பில் எமக்கு உரிய முறையில் அறிவிக்குமாறும் கிழக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் எச்.ஈ.எம்.டவலியு. ஜீ. திஸாநாயக்க ஒப்பமிட்டு அறிவித்துள்ளார்.
இதனடிப்படையில் சாய்ந்தமருது கமு/கமு/ மல்ஹருஸ் ஸம்ஸ் மகா வித்தியாலய புதிய அதிபராக, அதிபர் சேவை ஒன்றை சேர்ந்த எம். எஸ். நபார் அவர்கள் இன்று பாடசாலை பிரதி அதிபர் முன்னிலையில் பாடசாலையில் கடமையேற்றார். இந்நிகழ்வில் கல்முனை வலயக் கல்வி அலுவலக பிரதி கல்வி பணிப்பாளர்காளான எம்.எச். ஜாபீர், பீ. ஜீஹானா ஆலிப், உதவிக்கல்வி பணிப்பாளர்களான சாய்ந்தமருது கோட்டக்கல்வி அதிகாரி என்.எம்.எ.மலீக், நிந்தவூர் கோட்டக்கல்வி அதிகாரி யூ.எல்.எம். சாஜித், கல்முனை கோட்டக்கல்வி அதிகாரி யூ.எல். றியாழ், உதவி கல்வி பணிப்பாளர் ஏ.எல். முத்தரிஸ் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.


சாய்ந்தமருது கமு/கமு/மல்ஹருஸ் ஸம்ஸ் மகாவித்தியாலத்திற்கு புதிய அதிபர் Reviewed by வன்னி on December 22, 2023 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.