நோர்டன்பிரிட்ஜ் - மஸ்கெலியா பிரதான வீதியில் மண்சரிவு
நோர்டன்பிரிட்ஜ் - மஸ்கெலியா பிரதான வீதியின் கிரிவன்எலிய, பத்தனை பிரதான வீதியில் மண்சரிவினால் பாதிக்கப்பட்டுள்ளது.
இன்று (04) காலை 10.30 மணி அளவில் நோர்டன்பிரிட்ஜ் பகுதியில் பெய்த கடும் மழையினால் இந்த மண்சரிவு ஏற்பட்டுள்ளது.
குறித்த பாதையின் ஊடாக பயணிக்கும் போது, சரிவான பகுதியில் வாகனங்களை ஓட்ட வேண்டாம் என வாகன சாரதிகளுக்கு பொலிஸார் அறிவுறுத்தியுள்ளனர்.
மேலும் குறித்த பகுதியில் பல இடங்களில் மண்சரிவு மற்றும் மண்சரிவு அபாயம் உள்ளதால் வாகனங்களை ஓட்டும் போது அவதானமாக இருக்குமாறும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
நோர்டன்பிரிட்ஜ் - மஸ்கெலியா பிரதான வீதியில் மண்சரிவு
Reviewed by Author
on
December 04, 2023
Rating:

No comments:
Post a Comment