முருங்கன் ஆதார வைத்திய சாலையின் வைத்தியர்கள், தாதியர்கள் மற்றும் வைத்தியசாலை பணியாளர்களுக்கான வருடாந்த வருட இறுதி ஒன்றுகூடல்
மன்னார் மாவட்டம் முருங்கன் ஆதார வைத்திய சாலையின் வைத்தியர்கள், தாதியர்கள் மற்றும் வைத்தியசாலை பணியாளர்களுக்கான வருடாந்த வருட இறுதி ஒன்று கூடல் இன்று 18 ஆம் திகதி மதியம் 12 மணியளவில் முருங்கன் ஆதார வைத்திய சாலையின் வைத்திய அத்தியட்சகர் டாக்டர் திவ்யா அவர்களின் தலைமையிலும் , வழிகாட்டலிலும் மிக சிறப்பாக இடம் பெற்றது
இந்த ஒன்று கூடல் நிகழ்வின் விருந்தினர்களாக பிராந்திய சுகாதார வைத்திய சேவைகள் பணிப்பாளர் டாக்டர் டி வினோதன் அவர்களும் முசலி சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் ஒஸ்மன் அவர்களும் கலந்து சிறப்பித்தார்கள்
இதன்போது பல சிறப்பு நிகழ்வுகளாக கலை நிகழ்வுகள் அதனை தொடர்ந்து பணியாளர்களுக்கான அன்பளிப்புகளும் மற்றும் மதிய உணவு அவை முடிவடைந்த பின் பல உள்ளக விளையாட்டு நிகழ்வுகள் என்பன மிக சிறப்பாக இடம் பெற்றது

No comments:
Post a Comment