அண்மைய செய்திகள்

recent
-

வவுனியா பாவற்குளத்தில் வீழ்ந்து இளம்பெண் பலி!! அடையாளம் காண உதவுமாறு கோரிக்கை!

 வவுனியா பாவற்குளத்தில் வீழ்ந்து இளம்பெண் பலி!! அடையாளம் காண உதவுமாறு கோரிக்கை!

வவுனியா பாவற்குளத்தில் இருந்து இளம்பெண்னின் சடலம் ஒன்றை பொலிசார் மீட்டுள்ளனர்.குறித்த சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருகையில்….

இன்று மாலை பாவற்குளம் பகுதிக்கு சென்ற இளம்பெண் ஒருவர் குளத்தினுள் வீழ்ந்துள்ளார். இதனை அவதானித்த சிலர் உடனடியாக விரைந்து செயற்பட்டு பெண்ணை மீட்டதுடன் வவுனியா வைத்தியசாலையில் ஒப்படைத்தனர்.

எனினும் வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லும் முன்னரே குறித்த பெண் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சம்பவத்தில் 18-20 வயது மதிக்கத்தக்க இளம்பெண்ணே சடலமாக மீட்கப்பட்டதுடன் அவர் இது வரை அடையாளம் காணப்படவில்லை.

குறித்த சம்பவம் தற்கொலையா அல்லது தவறுதலாக இடம்பெற்றதா என்பது தொடர்பாக உலுக்குளம் பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்துவருகின்றனர்.



வவுனியா பாவற்குளத்தில் வீழ்ந்து இளம்பெண் பலி!! அடையாளம் காண உதவுமாறு கோரிக்கை! Reviewed by வன்னி on December 21, 2023 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.