அண்மைய செய்திகள்

recent
-

ஆணைக்குழுக்கள் அமைப்பது ஏமாற்று நாடகம்- காணாமல் ஆக்கப்பட்டோரினது உறவுகள்!

 ஆணைக்குழுக்கள் அமைப்பது ஏமாற்று நாடகம்- காணாமல் ஆக்கப்பட்டோரினது உறவுகள்!

வட-கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கத்தினரால் ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.

வவுனியா பழைய பேருந்து நிலையத்திற்கு முன்பாக இன்று (30.12) காலை குறித்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் கருத்து தெரிவிக்கையில்,

சர்வதேச நீதிக்காக போராடி வரும் நாம் பல வருடங்கள் கடந்தும் நீதி மறுக்கப்பட்ட நிலையில் தொடர்ச்சியாக ஏமாற்றத்திற்குள்ளாகி வருகின்றோம். அத்துடன் இலங்கை அரசின் ஆணைக்குழுக்கள் மீதும் அதன் விசாரணைகள் மீதும் நாம் முற்றாக நம்பிக்கை இழந்துள்ளோம். இந்த நாட்டில் உள்ளவர்களே போரை உருவாக்கி தமிழர்களை அழித்தார்கள். எனவே அவர்களால் உருவாக்கப்படும் ஆணைக்குழுக்கள் மீதும் அலுவலகங்கள் மீதும் எமக்கு துளியும் நம்பிக்கை இல்லை.

இழப்பீடு வழங்குவதும், மரணச்சான்றிதழ் வழங்குவதுமே அவர்களது நோக்கமாக உள்ளது. எமக்கு அது தேவையில்லை. எமது உறவுகளே தேவை. 12 ஆணைக்குழுக்களுக்கு மேல் அமைத்து விட்டார்கள்.  அனைத்துமே ஏமாற்று நாடகம். எனவே பிறக்கின்ற புதிய வருடத்திலாவது எமக்கான நீதியை வழங்குவதற்கு சர்வதேச சமூகம் முன்வரவேண்டும் எனத் தொழவித்தனர்.  


ஆர்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் ' 12 ஆணைக்குழுக்களுக்கு மேல் ஏமாற்று நாடகம், ராஜபக்ஸ குடும்பம் பேரக் குழுந்தைகளை கொஞ்சி மகிழும் போது நாம் பேரக் குழந்தைகளை தேடி வீதியில் நிற்கிறோம், குடும்பங்களாக சரணடைந்த போது அவர்களுடன் சரணடைந்த 29 குழந்தைகள் எங்கே'' என எழுதப்பட்ட அரசிற்கு எதிரான பதாதைகளை  ஏந்தியிருந்ததுடன் கோசங்களையும் எழுப்பியிருந்தனர்.









ஆணைக்குழுக்கள் அமைப்பது ஏமாற்று நாடகம்- காணாமல் ஆக்கப்பட்டோரினது உறவுகள்! Reviewed by வன்னி on December 30, 2023 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.