அண்மைய செய்திகள்

recent
-

இந்தியப் பெருங்கடலில் நிலநடுக்கம் : வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள அறிவிப்பு

 இந்தியப் பெருங்கடலில் நிலநடுக்கம்  வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள அறிவிப்பு

இந்திய பெருங்கடலில் 6.6 ரிச்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரித்துள்ளது.

குறித்த நிலநடுக்கம் இன்று சனிக்கிழமை (30) காலை 10.49 மணியளவில் இந்தோனேசியாவில் சுமத்ரா தீவின் வடக்கு பகுதியில்10 கிலோ மீற்றர் ஆழத்தில் ஏற்பட்டுள்ளது.

இதேவேளை, இந்த நிலநடுக்கத்தால் இலங்கைக்கு தற்போது சுனாமி ஆபத்து ஏதும் இல்லை. எனவே இலங்கையின் கரையோரப் பகுதிகள் பாதுகாப்பானவை என அறிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பான மேலதிக தகவல்கள் பொதுமக்களுக்கு ஊடகங்கள் மூலம் அறிவிக்கப்படும் எனவும் திணைக்களம் தெரிவித்துள்ளது.






இந்தியப் பெருங்கடலில் நிலநடுக்கம் : வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள அறிவிப்பு Reviewed by வன்னி on December 30, 2023 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.