விஜயகாந்துக்கு வவுனியாவில் அஞ்சலி!!
விஜயகாந்துக்கு வவுனியாவில் அஞ்சலி!!
மறைந்த நடிகரும் தேமுதிக தலைவருமான விஜயகாந்துக்கு வவுனியாவில் அஞ்சலி செலுத்தப்பட்டது.
தமிழ்நாட்டைசேர்ந்த நடிகரும் தேசிய முற்போக்கு திராவிடக்கழகத்தின் தலைவருமான விஜயகாந்த் அவர்கள் சுகவீனம் காரணமாக நேற்றயதினம் தமிழ்நாட்டில் மரணமடைந்தார்.
இதனையடுத்து சென்னையில் உள்ள தீவுத்திடலில் அவரதுஉடல் இறுதி அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருந்ததுடன் கோயம்பேட்டில் அமைந்துள்ள தேமுதிக கட்சி தலைமையகத்தில் இன்று மாலை இறுதிக்கிரியைகள் இடம்பெற்றது.
அவரது மரணத்திற்கு பல்வேறு தரப்புக்களும் அனுதாபம் செலுத்திவரும் நிலையில் வவுனியாதமிழ் விருட்சம் சமூக ஆர்வலர் அமைப்பு,மற்றும் பொது அமைப்புக்களின் ஏற்ப்பாட்டில் வவுனியா நகரப்பகுதியில் அமைந்துள்ள தனியார் விருந்தினர் விடுதியில் அஞ்சலி நிகழ்வு ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது.
இதன்போது அவரது திருவுருவ படத்திற்கு மெழுவர்த்தி ஏற்றி,மலரஞ்சலி செலுத்தப்பட்டது.அவர் தொடர்பான நினைவுப்பேருரைகளும் இடம்பெற்றது. நிகழ்வில் பலர் கலந்துகொண்டு அஞ்சலி செலுத்தியிருந்தனர்.

No comments:
Post a Comment