அண்மைய செய்திகள்

  
-

காத்தான்குடி மில்லத் பெண்கள் உயர்தரப் பாடசாலையின் முப்பெரும் நிகழ்வில் முன்னாள் ஆளுநர் கலாநிதி எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புழ்ழாஹ் பங்கேற்பு.

 காத்தான்குடி மில்லத் பெண்கள் உயர்தரப் பாடசாலையின் முப்பெரும் நிகழ்வில் முன்னாள் ஆளுநர் கலாநிதி எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புழ்ழாஹ் பங்கேற்பு.

காத்தான்குடி மில்லத் பெண்கள் உயர்தரப் பாடசாலை 95 ஆவது ஆண்டு நிறைவு விழாவும் மாணவர் பரிசளிப்பு மற்றும் ஆசிரியர் கௌரவிப்பு ஆகிய முப்பெரும் விழா காத்தான்குடி ஹிஸ்புழ்ழாஹ் மண்டபத்தில் நடைபெற்றது.


பாடசாலை அதிபர் திருமதி ஜெஸீமா முஸம்மில் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், கிழக்கு மாகாண முன்னாள் ஆளுநர் கலாநிதி எம்.எல்.ஏ.எம் ஹிஸ்புழ்ழாஹ் பிரதம அதிதியாகவும், மட்டக்களப்பு மத்தி வலயக் கல்விப் பணிப்பாளர் எஸ்.எம்.எம். அமீர் மற்றும் காத்தான்குடி நகரசபை செயலாளர் றிப்கா சபீன் ஆகியோர் கௌரவ அதிதிகளாகவும், காத்தான்குடி பிரதேச கோட்டக் கல்விப் பணிப்பாளர் ஏ.ஜி.எம். ஹக்கீம் விஷேட அதிதியாகவும் கலந்து கொண்டனர்.

இந்நிகழ்வில் புலமைப்பரிசில் சித்தி பெற்ற மாணவ, மாணவிகள், க.பொ.த சாதாரணதரத்தில் 9ஏ, 8ஏ, 7ஏ சித்தி பெற்ற மாணவிகளும், க.பொ.த (உயர்தரத்தில்) கலை மற்றும் வர்த்தகப் பிரிவில் சித்தியடைந்து பல்கலைக்கழக அனுமதி பெற்ற மாணவிகள் பதக்கம் அணிவித்துக் கௌரவிக்கப்பட்டதுடன்  அதிபர் மற்றும் ஆசிரியர்கள் பாடசாலை நிர்வாகத்தால் கௌரவிக்கப்பட்டனர். அதிபர் பாடசாலை நிறைவேற்றுக் குழுவாலும் கௌரவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.










காத்தான்குடி மில்லத் பெண்கள் உயர்தரப் பாடசாலையின் முப்பெரும் நிகழ்வில் முன்னாள் ஆளுநர் கலாநிதி எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புழ்ழாஹ் பங்கேற்பு. Reviewed by வன்னி on December 30, 2023 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.